Primary tabs

வேட்டநாள் பெற்ற மிகை’’
இதுவும் வேட்டல்.
‘‘விசையந் தப்பிய’’ என்னும் பதிற்றுப்பத்து ஈகை கூறிற்று.
‘‘ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின்’’
(குறள்.560)
இது காவல் கூறிற்று.
‘‘கடுங்கண்ண
கொல்களிற்றான்’’ என்னும் (14) புறப்பாட்டுட்
படைக்கலங் கூறியவதனாற் காத்தல் கூறியவாறுங் காண்க.
‘‘தொறுத்தவய லாரல்பிறழ்நவு
மேறு பொருதசெறு வுழாது வித்துநவுங்
கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல்
இருங்க ணெருமையி னிரைதடுக் குநவுங்
கலிகெழு துணங்கை யாடிய மருங்கின்
வளைதலை மூதா வாம்ப லார்நவு
மொலிதெங்கி னிமிழ்மருதிற்
புனல்வாயிற் பூம்பொய்கைப்
பாடல் சான்ற பயங்கெழு வைப்பி
னாடுகவி னழிய நாமம் தோற்றிக்
கூற்றடூஉ நின்ற யாக்கை போல
நீசிவந் திறுத்த நீரழி பாக்கம்
விரிபூங் கரும்பின் கழனி புல்லெனத்
திரிகாய் விடத்தரொடு காருடை போகிக்
கவைத்தலைப் பேய்மகள் கழுதூர்ந் தியங்க
வூரிய நெருஞ்சி நீறாடு பறந்தலைத்
தாதெரு மறத்த கலியழி மன்றத்
துள்ள மழிய வூக்குநர் மிடறபுத்
துள்ளுநர் பனிக்கும் பாழா யினவே
காடே கடவுண் மேன புறவே
யொள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன
வாறே யவ்வனைத் தன்றியு ஞாலத்துக்
கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக்
குடிபுறந் தருநர் பார மோம்பி
யழல்சென்ற மருங்கின் வெள்ளி யோடாது
மழைவேண்டு புலத்து மாரி நிற்ப
நோயொடு பசியிகந் தொரீஇப்
பூத்தன்று பெருமநீ காத்த நாடே’’
(பதிற்றுப்.13)
இதனுள், மறத்திற் சென்று நாட்டை அழித்தவாறும் அறத்திற்றிரிந்த
வேந்தனை
யழித்து அவன் நாட்டைக் குடியோம்பிக் காத்தவாறுங்
கூறிற்று.
‘‘கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.’’
(குறள்.550)
இது தண்டம்.
இருமூன்று
மரபின் ஏனோர் பக்கமும் - ஓதலும் வேட்டலும்
ஈதலும் உழவும் நிரையோம்பலும் வாணிகமுமாகிய அறுவகை
இலக்கணத்தையுடைய வாணிகர் பக்கமும்; வேதம் ஒழிந்தன ஓதலும்
ஈதலும் உழவும் நிரையோம்பலும் வாணிகமும் வழிபாடுமாகிய
அறுவகை இலக்கணத்தையுடைய வேளாளர்
பக்கமும்;
வாணிகரையும்
வேளாளரையும் வேறுகூறாது