Primary tabs

வேள்வியும் ஒழிந்த தொழில் இருவர்க்குமொத்தலின்.
இனி
வேளாளர்க்கு வழிபாடு கொள்ளாது
பெண்கோடல் பற்றி
வேட்டல் உளதென்று வேட்டலைக்கூட்டி ஆறென்பாரு
முளர்.
வழிபாடு இருவகை வேளாளர்க்கு உரித்து. இனி
வேட்டலைக்
கூட்டுவார் அரசராற் சிறப்பெய்தாத வேளாளர்க்கே வழிபாடு
உரித்தென்பர்.
‘பக்க’மென்பதனான்
வாணிகர்க்கும் வேளாளர்க்கும் அன்னியராகத்
தோன்றினாரையும்
அடக்குக. ஈண்டுப் பக்கத்தாராகிய குலத்தோர்க்குந்
தொழில்வரையறை
அவர்நிலைகளான் வேறுவேறுபடுதல் பற்றி
அவர்தொழில் கூறாது
இங்ஙனம் பக்கமென்பதனான் அடக்கினார்.
இவை ஆண்பால்பற்றி உயர்ச்சிகொண்டன.
உ-ம்:
‘‘ஈட்டிய தெல்லாத மிதன்பொருட் டென்பதே
காட்டிய கைவண்மை காட்டினார் - வேட்டொறுங்
காமருதார்ச் சென்னி கடல்சூழ் புகார்வணிகர்
தாமரையுஞ் சங்கும்போற் றந்து’’
(பெரும்பொருள் விளக்கம் புறத்திரட்டு.1161.குடிமரபு11)
இது வாணிகரீகை.
‘‘உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்ற னன்றே
பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளுஞ்
சிறப்பின் பாலாற் றாயுமனந் திரியு
மொருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக வென்னா தவரு
ளறிவுடை யோனா றரசுஞ் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவனு மவன்கட் படுமே’’
(புறம்.183)
இது வேளாளர் ஓதலின் சிறப்புக் கூறியது.
‘‘ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்’’
(குறள்.228)
இஃது இருவர்க்கும் ஈதற்சிறப்புக் கூறிற்று.
‘‘போர்வாகை வாய்ந்த புரவலரின் மேதக்கா
ரேர்வாழ்ந ரென்பதற் கேதுவாஞ் - சீர்சா
லுரைகாக்கு மன்னர்க் கொளிபெருகத் தாந்தம்
நிரைகாத்துத் தந்த நிதி’’
இது வேளாளர் நிரைகாத்தது.
‘‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்
தொழுதுண்டு பின்செல் பவர்’’
(குறள்.1033)
இஃது உழவுத்தொழிற் சிறப்பு இருவர்க்குங் கூறியது.
‘‘வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம்