Primary tabs

பேணிப்
பிறவுந் தமபோற் செயின்’’.
(குறள்.120)
இது வாணிகச் சிறப்பு இருவர்க்குங் கூறியது.
‘‘இருக்கை யெழலு மெதிர்செலவு மேனை
விடுப்ப வொழிதலோ டின்ன - குடிப்பிறந்தார்
குன்றா வொழுக்கமாக் கொண்டார் கயவரோ
டொன்றா வுணரற்பாற் றன்று.’’
(நாலடி. குடி.3)
இது வழிபாடு கூறியது. ஏனைய வந்துழிக் காண்க.
மறுவில் செய்தி
மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன்
தேயமும் - காமம் வெகுறி மயக்கமில்லாத
ஒழுகலாற்றினை இறப்பும்
நிகழ்வும் எதிர்வுமென்னும் மூவகைக்
காலத்தினும் வழங்கும்
நெறியான் அமைத்த முழுதுணர்வுடையோன்
பக்கமும்;
தேயத்தைக் ‘கிழவோ டேஎத்து’
(இறையனாரகப்.8) என்றாற்
போலக் கொள்க.
உ-ம்:
‘‘வாய்மை வாழ்ந மூதறி வாள
நீயே யொருதனித் தோன்ற லுறைபதி
யாருமி லொருசிறை யானே தேரி
னவ்வழி வந்தநின் னுணர்வுமுதற் றங்குந்
தொன்னெறி மரபின மூவகை நின்றன
காலமு நின்னொடு வேறென
யாரோஒ பெருமநிற் றேர்கு வோரே’’
என வரும்.
‘‘வாடாப் போதி மரகதப் பாசடை
மரநிழ லமர்ந்தோ னெஞ்சம் யார்க்கு
மருளின் றீந்தே னுரைந்துநனி ஞெகிழ்ந்து
மலரினு மெல்லி தென்ப வதனைக்
காமர் செவ்வி மாரன் மகளிர்
நெடுமா மழைக்கண் விலங்கிநிமிந் தெடுத்த
வாளும் போழ்ந்தில வாயின்
யாதோ மற்றது மெல்லிய வாறே.’’
இதுவும் அது.
கலசயோனியாகிய அகத்தியன் முதலியோரும் அறிவரென்றுணர்க.
நாலிருவழக்கிற்
றாபதப் பக்கமும் - அவ்வறிவர்
கூறிய
ஆகமத்தின்வழி நின்று வீடுபெற முயல்வார்க்கு உரியவாகிய
எண்வகை
மார்க்கத்துத் தவம்புரியுங் கூறும்;
‘வழக்’கென்றதனான்
அந்நாலிரண்டுந் தவம்புரிவார்க்கு உரியனவுந்
தவஞ்செய்து யோகஞ்செய்வார்க்கு உரியனவுமென இருவகையவென்று
கொள்க.
அவற்றுள் தவஞ்செய்வார்க்கு
உரியன. ஊணசையின்மை,
நீர்நசையின்மை, வெப்பம் பொறுத்தல், தட்பம் பொறுத்தல், இடம்
வரையறுத்தல், ஆசனம் வரையறுத்தல், இடையிட்டு மொழிதல்,
வாய்வாளாமை என எட்டும். இவற்றிற்கு, உணவினும் நீரினுஞ் சென்ற
மனத்தைத் தடுத்தலும், ஐந்தீநாப்பணும் நீர்நிலையினும்
நிற்றலுங்,
கடலுங் காடும் மலையும்
முதலியவற்றில் நிற்றலுந், தாமரையும்
ஆம்பலும்
யாமையும் முதலிய ஆசனத்திருத்தலும்,
உண்டற்காலை
உரையாடாமையுந்,
துறந்தக்காற்றொட்டும்
வாய்வாளாமையும்
பொருளென்றுணர்க.
இனி யோகஞ்செய்வார்க்குரியன.