Primary tabs

தகர்வென்றி பூழ்வென்றி கோழிவென்றி முதலியன பாலறிமரபிற்
பொருநர்கண் அனைநிலைவகையாம்.
ஒரு
வரையறைப்படாது பலதுறைப்படுவனவற்றை
யெல்லாந்
தொகைநிலையெனத்
தொகுத்து ஒரோவொன்றாக்கிக்
கூறினார்;
தொகுத்துக் கூறலென்னும்
உத்திவகையான். பார்ப்பன வாகை
அரசவாகையென்றோதினால் அவற்றின் பகுதி அடங்காமையிற்
குன்றக்
கூறலாமாதலின் இங்ஙனமோதினார். காட்டாதனவற்றிற்கு உதாரணங்கள்
வந்துழி வந்துழிக் காண்க. (20)
மறத்துறை ஒன்பதும்
அறத்துறை யொன்பதுமாக
வாகைக் குரிய துறை
பதினெட்டாதல்
காதலி னொன்றிக் கண்ணிய மரபினும்
ஏரோர் களவழி யன்றிக் களவழித்
தேரோர் தோற்றிய வென்றியுந் தேரோர்
வென்ற கோமான் முன்றேர்க் குரவையும்
ஒன்றிய மரபிற் பின்றேர்க் குரவையும்
பெரும்பகை தாங்கும் வேலி னானும்
அரும்பகை தாங்கு மாற்ற லானும்
புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும்
ஒல்லார் நாணப் பெரியவர்க் கண்ணிச்
சொல்லிய வகையி னொன்றொடு புணர்ந்து
தொல்லுயிர் வழங்கிய வவிப்பலி யானும்
ஒல்லா ரிடவயிற் புல்லிய பாங்கினும்
பகட்டி னானு மாவி னானும்
துகட்டபு சிறப்பிற் சான்றோர் பக்கமும்
கட்டி னீத்த பாலி னானும்
எட்டுவகை நுதலிய வவையத் தானும்
கட்டமை யொழுக்கத்துக் கண்ணுமை யானும்
இடையில் வண்புகழ்க் கொடைமை யானும்
பிழைத்தோர்த் தாங்குங் காவ லானும்
பொருளொடு புணர்ந்த பக்கத் தானும்
அருளொடு புணர்ந்த வகற்சி யானும்
காம நீத்த பாலி னானுமென்று
இருபாற்பட்ட வொன்பதிற்றுத் துறைத்தே
இது மேல் தொகுத்துக்
கூறிய எழுவகைத் திணையுள் அடங்காத
வற்றிற்கு
முற்கூறிய துறைகளே போலத் தொடர்
நிலைப்படுத்தாது
மறத்திற்கு
ஒன்பதும் அறத்திற்கு ஒன்பதுமாக
இருவகைப்படுத்துத்
துறை கூறுகின்றது.
(இ-ள்.)
கூதிர் வேனில் என்று இரு பாசறைக் காதலின் ஒன்றிக்
கண்ணிய மரபினும் - கூதிரெனவும் வேனிலெனவும் பெயர்பெற்ற
இருவகைப் பாசறைக்கண்ணுங் காதலால் திரிவில்லாத மனத்தனாகி
ஆண்டு நிகழ்த்தும் போர்த்தொழில் கருதிய மரபானும்;
கூதிர், வேனில்
ஆகுபெயர். அக்காலங்களிற் சென்றிருக்கும்
பாசறையாவது தண்மைக்கும் வெம்மைக்குந் தலைமைபெற்ற
காலத்துப்
போகத்திற் பற்றற்று வேற்றுப்புலத்துப் போந்திருத்தல். இக்
காலங்களிற் பிரிதல் வன்மையின் இது வென்றியாயிற்று. தலைவி மேற்
காதலின்றிப் போரின்மேற் காதலின் சேறலின்
‘ஒன்றி’யென்றார்.
இக்காலத்துச் சிறப்புப்