Primary tabs

காட்சியானும்;
கண்ணதுதன்மை
கண்மையெனப் படுதலின் அதனைக் கண்ணுமை
யென
உகரங் கொடுத்தார். எண்மை வன்மை
வல்லோர் என்பன
எளுமை வலுமை வல்லுவோர்
என்றாற்போல.
இவை மனத்தான்
இவ்வொழுக்கங்களைக்
குறிக்கொண்டு
ஐம்பொறியினையும் வென்று
தடுத்தலாம். அவை இல்லறத்திற்கு
உரியவாக
நான்கு வருணத்தார்க்குங் கூறிய அடக்கமுடைமை,
ஒழுக்க
முடைமை, நடவுநிலைமை,
பிறர்மனைநயவாமை, வெஃகாமை,
புறங்கூறாமை,
தீவினையச்சம், அழுக்காறாமை,
பொறையுடைமை
முதலியனவாம்.
உ-ம்:
‘‘ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி
னெழுமையு மேமாப் புடைத்து’’
(குறள்.126)
‘‘ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க
முயிரினு மோம்பப் படும்’’
(குறள்.131)
‘‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி’’
(குறள்.118)
‘‘பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனொன்றோ வான்ற வொழுக்கு’’
(குறள்.148)
‘‘படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்’’
(குறள்.172)
‘‘அறங்கூறா னல்ல செயினு மொருவன்
புறங்கூறான் என்ற லினிது
(குறள்.181)
‘‘தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செருக்கு’’
(குறள்.201)
‘‘ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் னெஞ்சுத்
தழுக்கா றிலாத வியல்பு’’
(குறள்.161)
‘‘மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்’’
(குறள்.158)
பிறவும் இந்நிகரனவெல்லாங் கொள்க.
‘‘விழையா வுள்ளம் விழையு மாயினுங்
என்றுங், கேட்டவை தோட்டி யாக மீட்டாங்
கறனும் பொருளும் வழாமை நாடித்
தற்றக வுடைமை நோக்கி மற்றதன்
பின்னா கும்மே முன்னியது முடித்தல்
இனைய பெரியோ ரொழுக்க மதனா
லரிய பெரியோர்த் தேருங் காலை’’
(அகம்.286:8.13)
என இது தொகுத்துக் கூறியது.
இடையில் வண்புகழ்க்
கொடைமையானும் - இடையீ டில்லாத
வண்புகழைப் பயக்குங் கொடைமையானும்;
உலகமுழுதும்
பிறர்புகழ் வாராமைத் தன்புகழ் பரத்தலின்
‘இடையி’லென்றார்.
வண்புகழ்
- வள்ளிதாகிய புகழ்; அது வளனுடையதென விரியும்.
இக்கொடைப்
புகழுடையான் மூப்புப் பிணி சாக்காட்டுக்கு அஞ்சாமை
யின் அது
வாகையாம்.
உ-ம்:
‘‘மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே
துன்னருஞ் சிறப்பி னுயர்ந்த செல்வ
ரின்மையி னிரப்போர்க் கீஇ யாமையிற்
றொ