தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5070


ன்மை மாக்களிற் றொடர்பறி யலரே
தாடாழ் படுமணி யிரட்டும் பூநுத
லாடியல் யானை பாடுநர்க் கருகாக்
கேடி னல்லிசை வயமான் றோன்றலைப்
பாடி நின்றனெ னாகக் கொன்னே
பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென்
னாடிழந் ததனின நனியின் னாதென
வாள்தந் தனனே தலையெனக் கீயத்
தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையி
னாடுமலி யுவகையொடு வருகுவ
லோடாப் பூட்கைநின் கிழமையோற் கண்டே’’   (புறம்.165)

என வரும். இது புறம்.

பிழைத்தோர்த்  தாங்குங் காவலானும் - தம்மைப் பிழைத்தோரைப்
பொறுக்கும் பாதுகாப்பானும்;

காவலாவது இம்மையும் மறுமையும்  அவர்க்கு ஏதம்வாராமற் காத்த
லாதலான், இஃது ஏனையோரின் வெற்றியாயிற்று.

உ-ம்:

‘‘தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்
றெம்மை யிகழ்ந்த வினைப்பயந்தா - லும்மை
யெரிவாய் நிரயத்து வீழ்வர்கொ லென்று
பரிவதூஉஞ் சான்றோர் கடன்’’              (நாலடி.58)

‘‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை’’       (குறள். பொறை 1)

என வரும்.

பொருளொடு   புணர்ந்த பக்கத்தானும் - அரசர்க்குரிய வாகிய படை
குடி    கூழ்    அமைச்சு    நட்பு    முதலியனவும்    புதல்வரைப்
பெறுவனவுமாகிய பொருட்டிறத்துப்பட்ட வாகைப் பகுதியானும்;

‘பக்க’மென்றதனான் மெய்ப்பொரு ளுணர்த்துதலுங் கொள்க.

உ-ம்:

‘‘படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு
முடையா னரசரு ளேறு’’                  (குறள்.381)

நாடு அரண் முதலாகக்  கூறுவனவெல்லாந்  திருவள்ளுவப் பயனிற்
காண்க.

‘‘படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணு
முடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
யிட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடை யடிசின் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறை யில்லைத் தாம்வாழு நாளே’’      (புறம்.188)

‘‘கேள்வி கேட்டுப் படிவ மொடியது’’              (74)

என்னும் பதிற்றுப்பத்தும் அது.

‘‘ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லாத வர்க்கு’’             (குறள்.354)

என வரும்.

அருளொடு  புணர்ந்த  அகற்சியானும்   -   அருளுடைமையொடு
பொருந்திய துறவறத்தானும்;

அருளொடு   புணர்தலாவது     ஓருயிர்க்கு      இடர்வந்துழித்
தன்னுயிரையும்  கொடுத்துக்  காத்தலும்,  அதன்  வருத்தந்  தனதாக
எண்ணி  வருந்துதலும்,  பொய்யாமை  கள்ளாமை  முதலியனவுமாம்.
இக்கருத்து   நிகழ்ந்த  பின்னர்த்  துறவுள்ளம்  பிறத்தலின்  இதுவும்
அறவெற்றியாயிற்று.

உ-ம்:

‘‘புனிற்றுப் பசியுழந்த புலிப்பிணவு தனாது
முலைமறாக்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:44:49(இந்திய நேரம்)