Primary tabs

குழவி வாங்கி வாய்மடுத்
திரையெனக் கவர்வுற நோக்கி யாங்க
ஏரிளங் குழவியின் முன்சென்று தானக்
கூருகிர் வயமான் புலவுவேட்டுத் தொடங்கிய
வாளெயிற்றுக் கொள்ளையிற் றங்கினன் கதுவப்
பாசிலைப் போதி மேவிய பெருந்தகை
யாருயிர் காவல் பூண்ட
பேரருட் புணர்ச்சியி னகலு மாறே’’
‘‘தன்னுயிர்க் கின்னாமை தானறிவா னென்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்’’
(குறள்.318)
‘‘வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்’’
(குறள்.291)
‘‘களவென்னுங் காரறி வாண்மை யளவென்னு
மாற்றல் புரிந்தார்க ணில்’’
(குறள்.287)
‘‘யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன்’’
(குறள்.341)
ஏனையவும் இதன்கண் அடக்குக.
காமம் நீத்த
பாலினானும் - அங்ஙனம் பிறந்தபின்னர் எப்பொருள்
களினும் பற்றற்ற பகுதியானும்;
உ-ம்:
‘‘காமம் வெகுளி மயக்க மிவைமூன்றின்
நாமங் கெடக் கெடு நோய்’’
(குறள்.360)
என வரும்.
பாலென்றதனான்
உலகியலு ணின்றே காமத்தினைக்
கைவிட்ட
பகுதியுங் கொள்க.
‘‘இளையர் முதிய ரெனவிருபால் பற்றி
விளையு மறிவென்ன வேண்டா - விளையனாத்
தன்றாதை காம நுகர்தற்குத் தான்காம
மென்றாது நீத்தா னுளன்.’’
(பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு.542.
அறிவுடைமை-15)
என வரும்.
என்று
இருபாற்பட்ட ஒன்பதிற்றுத் துறைத்தே. முன்னர்
ஒன்பானும்
பின்னர் ஒன்பானுமாக இரண்டு கூறுபட்ட
ஒன்பதாகிய பதினெட்டுத்
துறையினையுடைத்து வாகை
எ-று.
இதனுள் ஏது
விரியாதனவற்றிற்கும் ஏது
விரித்தவாற்றான்
இருபாற்பட்ட
பதினெட்டாத லுடைத்தென முடிக்க.
(21)
காஞ்சி பெருந்திணையது
புறனாதல்
இத்துணையும்
உரிப்பொருள் பெற்ற அகத்திணைக்குப்
புறங்கூறி,
இஃது உரிப்பொருளல்லாத பெருந்திணைக்குப் புறனிது
வென்கின்றது.
இதனை வாகைக்குப்
பின்வைத்தார். வீரக்குறிப்பு நிலையாமைக்
குறிப்போடு உறவுடைத்து
என்றற்கு.
(இ-ள்.)
காஞ்சிதானே பெருந்திணைப் புறனே - எழுதிணையுட்
காஞ்சிதானேயெனப்
பிரிக்கப்பட்ட புறத்திணை
பெருந்திணைக்குப்
புறனாம் எ-று.
அதற்கு
இது புறனாயவாறு என்னையெனின்,
எண்வகை
மணத்தினும் நான்கு மணம்பெற்ற பெருந்திணை போல இக்காஞ்சியும்
அற முதலாகியமும் முதற்பொருளும் அவற்றது நிலையின்மையு மாகிய
ஆறனுள்ளும் நிலையின்மை மூன்றற்கும் உரித்தாய் எல்லாத்
திணைகட்கும் ஒத்த
மரபிற்றாகலானும், ‘பின்னர் நான்கும்
பெருந்திணை பெறு