தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5073


வன்   தேயமுந்  தாபதப்பக்கமும்  பற்றி  நிலையின்மைக்  குறிப்புப்
பெற்றாம்.

உ-ம்:

‘‘மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக
வியங்கிய விருசுடர் கண்ணெனப் பெயரிய
வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்
வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்துப்
பொன்னந் திகிரி முன்சமத் துருட்டிப்
பொருநர்க் காணாச் செருமிகு மொய்ம்பின்
முன்னோர் செல்லவுஞ் சொல்லா தின்னும்
விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற
வுளனே வாழியர் யானெனப் பன்மா
ணிலமக ளழுத காஞ்சியு
முண்டென வுரைப்பரா லுணர்ந்திசி னோரே’’   (புறம்.365)

இதனுள்   ‘உண்டென   உரைப்பரால்   உணர்ந்தோ’  ரென்றலின்
வீடுபேறு    ஏதுவாகத்   தாபதர்   போல்வார்க்கு   நில்லா   உலகம்
புல்லியதாயிற்று.   வீடுபேறு   நிமித்தமாகச்   சான்றோர்    பல்வேறு
நிலையாமையை அறைந்த மதுரைக்காஞ்சி இதற்கு உதாரணமாம்.   (23)

நிலையின்மைப் பொருள்களை வகுத்தோதுதல்
 

79,
மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையுங்
கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்
பண்புற வரூஉம் பகுதி நோக்கிப்
புண்கிழித்து முடியு மறத்தி னானும்
ஏமச் சுற்ற மின்றிப் புண்ணோற்
பேஎ யோம்பிய பேஎய்ப் பக்கமும்
இன்னனென் றிரங்கிய மன்னை யானும்
இன்னது பிழைப்பி னிதுவா கியரெனத்
துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத் தானும்
இன்னகை மனைவி பேஎய்ப் புண்ணோன்
துன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும்
நீத்த கணவற் றீர்த்த வேலிற்
பேஎத்த மனைவி யாஞ்சி யானும்
நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி
மகட்பா டஞ்சிய மகட்பா லானும்
முலையு முகனுஞ் சேர்த்திக் கொண்டோன்
தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ
யீரைந் தாகு மென்ப பேரிசை
மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம்
ஆய்ந்த பூசன் மயக்கத் தானுந்
தாமே யேங்கிய தாங்கரும் பையுளுங்
கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச்
செல்வோர் செப்பிய மூதா னந்தமும்
நனிமிகு சுரத்திடைக் கணவனை யிழந்து
தனிமகள் புலம்பிய முதுபா லையுங்
கழிந்தோர் தேஎத் தழிபடருறீஇ
யொழிந்தோர் புலம்பிய கையறு நிலையுங்
காதலி யிழந்த தபுதார நிலையும்
காதலன் இழந்த தாபத நிலையும்
நல்லோள் கணவனொடு நனியழற் புகீஇச்
சொல்லிடை யிட்ட பாலை நிலையும்
மாய்பெருஞ் சிறப்பிற் புதல்வன் பெயரத்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:45:24(இந்திய நேரம்)