தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5272


 

ன் தான்   வந்து  நீங்கினமை அறிதற்கு ஒரு குறி செய்தன்றி வாளாது
பெயரானன்றே? அக்  குறிகாணுங்   காட்சி   விருப்பினாற்   றலைவி
பிற்றைஞான்று விடியலிற் சென்றுஆண்டைக் குறிகண்டுகலங்கி, அவனை
எதிர்ப்படுதல்   வேட்கையளாகிச்  செய்வது  அறியாது  மயக்கத்தோடு
அவள் கையறவு எய்தும் பொழுதின் கண்ணும்:

‘தான்’   என்றது   தலைவனை.  இரவுக்குறியினை ‘அக’ மென்றார்,
இரவுக்குறி எயிலகத்தது என்பதனான். குறியிற்சென்று நீங்குவ னெனவே
காட்சி அவன்மேற்றன்றிக் குறிமேற்றாம். குறி: மோதிரம் மாலை முத்தம்
முதலியன  கோட்டினுங்  கொடியினும்  இட்டு  வைத்தனவாம்;  இவை
வருத்தத்திற்கு ஏதுவாம். இது விடியல் நிகழுமென்றற்குப்பொழுதென்றார்;
எனவே காண்பன விடியலிற் காணுமென்றார்.  ‘மயங்கும்’  என்றதனான்
தோழியும் உடன்மயங்கும். அது,

“இக்காந்தண் மென்முகைமேல் வண்டன்றஃதிம்முகையில்
கைக்காந்தண் மெல்விரலாய் காணிதோ - புக்குச்
செறிந்ததுபோற் றோன்றுந் தொடுபொறி யாம்பண்டு
அறிந்ததொன் றன்ன துடைத்து.”

புகாஅக்  காலைப் புக்கு எதிர்ப்பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக்
கண்ணும்- உண்டிக்காலத்துத்  தலைவியில்லத்துத் தலைவன் புக்கெதிர்ப்
பட்ட வழி, நீக்கி நிறுத்தாத விருந்து ஏற்றுக்கொள்ளும் பகுதிக்கண்ணும்:

எனவே,   மனையகம் புகுதற்கு ஒவ்வாத மிக்க தலைவன் புகுந்தால்
இஃதொன் றுடைத்தெனத் தேராது தாய்  அவனை  விருந்தேற்று  நீக்கி
நிறுத்தற் பகுதியுந் தழீஇயினவாறாயிற்று.

புகாக்காலமாதலிற்  பகாவிருந்தென்றார். விடியற்காலமாயிற் றலைவன்
புகானெனவும், புகாக்காலத்துப் புக்கஞான்றாயின்  அவர்  விருந்தேற்றுக்
கோடல்   ஒருதலையென்று   புகும்   என்றுங்   கொள்க.   தலைவி
காட்சியாசையிற்   கலங்கிய  தற்கேற்பத்  தலைவர்க்குங்   காட்சியாசை
கூறிற்று. அது,

“சுடர்த்தொடீஇ கேளா
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:23:53(இந்திய நேரம்)