Primary tabs


ய் தெருவினா மாடும்
மணற்சிற்றில் காலிற் சிதையா அடைச்சிய
கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி
நோதக்க செய்யும் சிறுபட்டி மேலோர்நாள்
அன்னையும் யானும் இருந்தேமா இல்லிரே
உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற் கன்னை
அடர்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய்
உண்ணுநீ ரூட்டிவா வென்றா ளெனயானும்
தன்னை அறியாது சென்றேன்மற் றென்னை
வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு
அன்னாய் இவனொருவன் செய்ததுகா ணென்றேனா
அன்னை அலறிப் படர்தரத் தன்னையான்
உண்ணுநீர் விக்கினான் என்றேனா அன்னையுந்
தன்னைப் புறம்பழித்து நீவமற் றென்னைக்
கடைக்கணாற் கொல்வான்போல் நோக்கி நகைக்கூட்டஞ்
செய்தானக் கள்வன் மகன்.”
(கலி.51)
இது புகாக்காலத்துப் புக்கானை விருந்தேற்றுக் கொண்டமை
இன்னொருகாலத்துத் தலைவி தோழிக்குக் கூறியவாறு காண்க.
“அன்னை வாழ்க பலவே தெண்ணீர்
இருங்கடல் வேட்டம் எந்தை புக்கெனத்
தார்மணி நெடுந்தேர் நீவி யானுமோர்
எல்லமை விருந்தின னென்ற
மெல்லம் புலம்பனைத் தங்கென் றோளே.”
இது தோழிகூற்றுமாம்.
‘ஒன்றிய தோழி’ (41) யென்றனான் தோழிகூற்று வந்துழிக் காண்க.
“மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை
புனறரு பசுங்காய் தின்றதன் றப்பற்கு
ஒன்பதிற் றொன்பது களிற்றோ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரயத்துச் செலீஇயரோ அன்னை
யொருநாள், நகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக வூரிற் றுஞ்சலோ விலளே.”
(குறுந்.292)
இது புகக்காலத்துத் தலைமைமிக்க தலைவன்
புக்கதற்குவிருந்தேலாது
செவிலி இரவுந் துயிலாதாளைத் தலைவி முனிந்து கூறியது.
வேளாண் எதிரும் விருந்தின்கண்ணும் - அங்ஙனம் விருந்தா
தலேயன்றித் தலைவி வேளாண்மை செய்ய எதிர்கொள்ளக் கருதுதல்
காரணத்தான் தோழி அவனை விருந்தேற்றுக் கோடற் கண்ணும்:
என்றது, தலைவி அவற்கு உபகாரஞ்செய்யக் கருதி
அதனைக்
குறிப்பாற் கூறத், தோழி அவனை விரு