தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5277


 

நீடின்று
நினக்கு வருவதாக் காண்பா யனைத்தாகச்
சொல்லிய சொல்லும் வியங்கொளக் கூறு;
தருமணற் றாழப்பெய் தில்பூவ லூட்டி
யெருமைப் பெடையோ டெமரீங் கயரும்
பெருமண மெல்லாந் தனித்தே யொழிய
வரிமணன் முன்றுறைச் சிற்றில் புனைந்த
திருநுதல் ஆயத்தார் தம்முட் புணர்ந்த
வொருமணந் தானறியு மாயின் எனைத்தும்
தெருமரல் கைவிட் டிருக்கோ வலர்ந்த
விரிநீ ருடுக்கை உலகம் பெறினும்
அருநெறி யாயர் மகளிர்க்கு
இருமணங் கூடுத லில்லியல் பன்றே”           (கலி.114)

என வரும்.

“மள்ளர் குழீஇய விழவி னானும்”              (குறுந்.31)

என்பதுமாம்.

இச்சூத்திரத்து  உருபும்   எச்சமுமாயவற்றைக்  ‘கிழவோண்  மேன’
என்பதனொடு   முடித்து,   முற்றிற்குக்   கிளவியென   ஒரு   பெயர்
வெளிப்படுத்து   முடிக்க.   புல்லிய   எதிரையும்   உடன்படுதலையும்
மறுத்தலுட்   தொகுத்து.   கிழவோள்  மேன  என்மனார்  புலவர்  -
தலைவியிடத்தன கிளவியென்று கூறுவர் புலவர் என்றவாறு. (16)

காமப்புணர்ச்சிக்கண்நாணுமடனும்

குறிப்பினுமிடத்தினும் வருமெனல்

101. காமத் திணையிற் கண்ணின்று வரூஉம்
நாணும் மடனும் பெண்மைய வாதலின்
குறிப்பினும் இடத்தினு மல்லது வேட்கை
நெறிப்பட வாரா அவள்வயி னான.

இஃது   உள்ளப்புணர்ச்சிக்கு   உரியவாறு   மெய்யுறு   புணர்ச்சிக்
கண்ணும் நிகழுமென்ற  நாணும்   மடனுங்   குறிப்பினும்  இடத்தினும்
வருமெனக்  கூறுதலின், ‘அச்சமு நாணும்’ (தொல்.பொ.99) என்பதற்குப்
புறநடையாயிற்று. இதனை ஈண்டுக்   கூறினான்,  இடத்தின்கண்  வரும்
நாணும் மடனுந் தந்தன்மை திரிந்துவருமென்பதூஉம், அது கூற்றின்கண்
வருமென்பதூஉங்   கூற்றுநிகழ்கின்ற  இவ்விடத்தே  கூறவேண்டுதலின்.
எனவே, இது முதலிய சூத்திரம் மூன்றும் முன்னர்த் தலைவிக்குக் கூற்று
நிகழு மென்றற்குக், கூற்றுநிகழுங்கால்  நாணும்  மடனும்  நீங்கக் கூறும்
என்று அக்கூற்றிற்கு இலக்கணங் கூறினவேயாயிற்று.

(இ-ள்.) அவள்வயின் ஆன நாணும் மடனும் பெண்மைய ஆதலின்-
தலைவியிடத்து   உளவாகிய   நாணும் மடனும் பெண்மைப் பருவத்தே
தோன்றுதலையுடையவாதலின்; காமத்திணையிற் கண்ணின்று குறிப்பினும்
வரூஉம் - அப்பருவ
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:24:52(இந்திய நேரம்)