தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5278


 

த்தே தோன்றிய காமவொழுக்கங் காரணமாக அவை கண்ணின்கணின்று
குறிப்பினும் வரும்; வேட்கை நெறிப்பட இடத்தினும்  வரூஉம் - அன்றி
வேட்கை   தன்றன்மை   திரியாது  வழிப்படுதலானே கரும நிகழ்ச்சிக்
கண்ணும்  வரும்; அல்லது வாரா - அவ்வீரிடத்துமல்லது அவை வாரா
எ-று.

இயற்கைப் புணர்ச்சிக்கண்  உரியவாகக்     கூறும்    பன்னிரண்டு
மெய்ப்பாட்டானுங் குறிப்பின்கண் நாணும் மடனும் நிகழ்ந்தவாறுணர்க.

“ஒருநெறிப் பட்டாங் கோரியன் முடியுங்
கரும நிகழ்ச்சி யிடமென மொழிப”   (தொல்.பொ.செய்.198)

என்னுஞ் செய்யுளியற் சூத்திரத்தான்  இடமென்றதனைக் கரும நிகழ்ச்சி
என்றுணர்க:

அஃதாவது   இடந்தலைப்பாடும் பாங்கொடு தழாஅலுந் - தோழியிற்
புணர்வுமாம்.   இவற்றின்கண்ணும்  நாணும்  மடனும்  நிகழுமென்றான்.
இனித்  தோழியிற்  புணர்வின்கண்  வரும்  நாணும் மடனுந்தந்தன்மை
திரிந்துவருமென மேலிற் சூத்திரத்தாற் கூறுகின்றான். (17)

கரும நிகழ்ச்சிக்கண் நாணும் மடனுந் தந்தன்மை

திரிந்து வருமெனல்

102. காமஞ் சொல்லா நாட்ட மின்மையின்
ஏமுற விரண்டும் உளவென மொழிப.

இது    கருமநிகழ்ச்சிக்கண்   வரும்   நாணும்  மடனுந் தந்தன்மை
திரிந்துவரு மென்கின்றது.

(இ-ள்.)  சொல்லாக் காமம் இன்மையின் - கரும நிகழ்ச்சி யிடத்துக்
கூற்று  நிகழாத  காமம்  புலனெறி  வழக்கின்கணின்மையின்; இரண்டும்
ஏமுற   நாட்டம்  உளவென  மொழிப  -  முற்கூறிய நாணும் மடனுந்
தந்தன்மை திரிந்துவர நாட்டுதல் உளவென்று கூறுவர் புலவர் எ-று.

என்றது,   தோழியிற்   கூட்டத்துத்   தலைவி  கூற்று  நிகழ்த்துவ
ளென்பதூஉம், நிகழுங்கால் நாணும் மடனும்  பெரும்பான்மை   கெட்டு
அக்கூற்று நிகழுமென்பதூஉம், அங்ஙனங்கெடுதலையும்   முந்துநூற்கண்
ஆசிரியர் நாட்டுதல் உளவென்பதூஉங் கூறியவாறாயிற்று.

“தேரே முற்றன்று நின்னினும் பெரிதே”          (கலி.74)

“பேரேமுற் றாய்போல முன்னின்று விலக்குவாய்”  (கலி.114)

என்றாற் போல்வன மயக்கம் உணர்த்திற்று.

இனி நாணும் மடனுங்கெட்டகூற்றுத் தோழியை நோக்கிக்  கூறுமென
மேற்கூறுகின்றான். (18)

நாணும் மடனும்பெரும்பாலும் நிகழாத கூற்றுத் தலைவி

தோழிக்குக் கூறுமெனல்

103. சொல்லெதிர் மொழிதல் அ
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:25:03(இந்திய நேரம்)