தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5279


 

ருமைத் தாகலின்
அல்ல கூற்றுமொழி அவள்வயி னான.

இது நாணும் மடனும் பெரும்பான்மை நிகழாத கூற்றுத்  தோழிக்குத்
தலைவி கூறுமென்கின்றது.

(இ-ள்.)  எதிர்   சொல் -  அங்ஙனம்   நாணும்  மடனும் நீங்கிய
சொல்லை;  அவள்  வயின் மொழிதல் அருமைத்து அல்ல ஆகலின் -
தோழி யிடத்துக்    கூறுதல்   அருமையுடைத்தல்ல   வாகையினானே;
கூற்றுமொழி   ஆன   -   குறிப்பானன்றிக்   கூற்றாற்  கூறும் மொழி
தலைவிக்குப் பொருந்தின எ-று.

எதிர்தல்    தன்றன்மை   மாறுபடுதல்.   ‘ஒன்றிய   தோழியொடு’
(தொ.பொ.41) என அகத்திணையியற் கூறுதலானுந்  ‘தாயத்தி  னடையா’
(தொ.பொ.221)   எனப்   பொருளியலிற்  கூறுதலானும்,  அவள் வயின்
நாணும் மடனும் நீங்கிய சொல்லைக் கூறுதலும்   பொருந்து மென்றான்;
அவை   முற்காட்டிய உதாரணங்களுட்  “கூடுதல்  வேட்கையாற்  குறி
பார்த்து” (கலி.46) எனவும். “வளைமுன்கை  பற்றி   நலியத்   தெருமந்
திட்டு” (கலி.51)  எனவும், “காமநெரிதரக்  கைந்நில் லாதே” (குறுந்.149)
எனவுங் கூறிய வாற்றானும், மேற்கூறுகின்ற உதாரணங்களானும், நாணும்
மடனும் நீங்கிக் கூற்று நிகழ்ந்தவாறுணர்க.

சூத்திரத்துட்பொருளன்றியும்....  படுமே’   (தொல்.  பொ.  மர. 103)
என்பதனான், இவ்விலக்கணம்  பெறுதற்கு,  இம்மூன்று சூத்திரத்திற்கும்
மாட்டுறுப்புப்படப் பொருள் கூறினாம்.

இனிக்  கூற்று   நிகழுங்கால், நாணும் மடனும் பெண்மையவாதலிற்,
குறிப்பினும் இடத்தினுமன்றி வேட்கை நெறிப்பட வாராவென்று பொருள்
கூறிற், காட்டிய  உதாரணங்கட்கு    மாறுபாடாகலானுஞ்,   சான்றோர்
செய்யுட்களெல்லாங் குறிப்பும் இடனுமன்றிப்  பெரும்பான்மை  கூற்றாய்
வருதலானும்,    ஆசிரியர்   தலைவன்   கூற்றுந்   தலைவி  கூற்றுந்
தோழிகூற்றுஞ்     செவிலி     கூற்றுமெனக்    கூற்றுஞ்    சேர்த்து
நூல்செய்தலானும் அது பொருளன்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:25:15(இந்திய நேரம்)