Primary tabs


மையுணர்க. (19)
இதுவுந் தலைவிகூற்று நிகழுமாறு கூறல்
104. மறைந்தவற் காண்டல் தற்காட் டுறுதல்
நிறந்தகாதலிற் சொல்லெதிர் மழுங்கல்
வழிபாடு மறுத்தல் மறுத்தெதிர் கோடல்
பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல்
கைபட்டுக் கலங்கினும் நாணுமிக வரினும்
இட்டுப்பிரி விரங்கினும் அருமைசெய் தயர்ப்பினும்
வந்தவழி யெள்ளினும் விட்டுயிர்த் தழுங்கினும்
நொந்துதெளி வொழிப்பினும் அச்சம் நீடினும்
பிரிந்தவழிக் கலங்கினும் பெற்றவழி மலியினும்
வருந்தொழிற் கருமை வாயில் கூறினும்
கூறிய வாயில் கொள்ளாக் காலையும்
மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு
நினைத்தல் சான்ற அருமறை யுயிர்த்தலும்
உயிராக் காலத் துயிர்த்தலும் உயிர்செல
வேற்றுவரைவு வரினது மாற்றுதற் கண்ணும்
நெறிபடுநாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும்
பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி
ஒருமைக் கேண்மையி னுறுகுறை தெளிந்தோள்
அருமை சான்ற நாலிரண்டு வகையின்
பெருமை சான்ற வியல்பின் கண்ணும்
பொய்தலை யடுத்த மடலின் கண்ணும்
கையறு தோழி கண்ணீர் துடைப்பினும்
வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும்
குறியி னொப்புமை மருடற் கண்ணும்
வரைவுதலை வரினும் களவறி வுறினும்
தமர்தற் காத்த காரண மருங்கினும்
தன்குறி தள்ளிய தெருளாக் காலை
வந்தனன் பெயர்ந்த வறுங்கள நோக்கித்
தன்பிழைப் பாகத் தழீஇத் தேறலும்
வழுவின்று நிலைஇய வியற்படு பொருளினும்
பொழுது மாறும் புரைவ தன்மையின்
அழிவுதலை வந்த சிந்தைக் கண்ணும்
காமஞ் சிறப்பினும் அவனளி சிறப்பினும்
ஏமஞ் சான்ற உவகைக் கண்ணும்
தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தையும்
அன்னவு முளவே யோரிடத் தான.
இதனுள் தலைவிகூற்று நிகழ்த்துமாறு கூறுகின்றான்.சில
கூற்றுக்களுள்
தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தையும்
பட நிகழ்த்தவும்
பெறுமென்கின்றான்.
‘அவன்வயின்’ எனவே ‘தன்’
னென்றது
தலைவியையாம்; உரிமை - களவிலே
கற்புக்கடம் பூண்டொழுகல்;
எனவே, புலவியுள்ளத்தாளாகவும் பெறுங் களவினென்பது கருதிப்
பரத்தையுமுள என்றான்; ஊடலும் உணர்த்த