தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5287


 

ப்பினும்:

உ-ம்:

“மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉ மென்ப யாவதும்
கொடிய ரல்லரெங் குன்றுகெழு நாடர்
பசைஇப் பசந்தன்று நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே”     (குறுந்.87)

“மென்றினை மேய்ந்த சிறுகட் பன்றி
வன்க லடுக்கத்துத் துஞ்சு நாடன்
எந்தை யறித லஞ்சிக்கொல்
அதுவே தெய்ய வாரா மையே”            (ஐங்குறு.261)

“புனையிழை நோக்கியும் புனலாடப் புறஞ்சூழ்ந்தும்
மணிவரி தைஇயும்நம் மில்வந்து வணங்கியும்
நினையுபு வருந்துமிந் நெடுந்தகை திறத்திவ்வூர்
இளையளென் றெடுத்தோதற் கனையையோ நீயென
வினவுதி யாயின் விளங்கிழாய் கேளினி;
செவ்விரல் சிவப்பூரச் சேட்சென்றா யென்றவன்
பௌவநீர்ச் சாய்க்கொழுதிப் பாவைதந் தனைத்தற்கோ
கௌவைநோ யுற்றவர் காணாது கடுத்தசொல்
ஒவ்வாவென் றுணராய்நீ யொருநிலையே யுரைத்ததை;
ஒடுங்கியாம் புகலொல்லேம் பெயர்தர வவன்கண்டு
நெடுங்கய மலர்வாங்கி நெறித்துத்தந் தனைத்தற்கோ
விடுந்தவர் விரகின்றி யெடுத்தசொற் பொய்யாகக்
கடிந்தது மிலையாய்நீ கழறிய வந்ததை;
வரிதேற்றாய் நீயென வணங்கிறை யவன்பற்றித்
தெரிவேய்த்தோட் கரும்பெழுதித் தொய்யில்
                             செய்தனைத்தற்கோ
புரிபுநம் மாயத்தார் பொய்யாக வெடுத்த சொல்
உரி தென வுணராய்நீ யுலமந்தாய் போன்றதை; எனவாங்கு,
அரிதினி யாயிழா யதுதேற்றல் புரிபொருங்கு
அன்று நம் வதுவையு ணமர்செய்வ தின்றீங்கே
தானயந் திருந்ததிவ் வூராயின் எவன்கொலோ
நாஞ்செயற் பால தினி                       (கலி.76)

எனவரும்.

பிரிந்தவழிக்   கலங்கினும்  - களவு அலராகாமல் யான் பிரிந்துழித்
தலைவி  கலங்குவளென்று  அஞ்சித்  தலைவன்  பிரியாது உறைதலிற்
பிரிவைக்   கருதப்   பெறாத  தலைவி  அவ்வாறன்றிப்   பிரிந்துழிக்
கலங்கினும்:

உ-ம்:

“மின்னுச் செய் கருவிய பெயன்மழை தூங்க
விசும்பா டன்னம் பறைநிவந் தாங்குப்
பொலம்படைப் பொலிந்த வெண்டே ரேறிக்
கலங்குகடற் றுவலை யாழி நை
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:26:52(இந்திய நேரம்)