Primary tabs


னப்ப
இனிச்சென் றனனே இடுமணற் சேர்ப்பன்
யாங்கறிந் தன்றுகொல் தோழியென்
தேங்கமழ் திருநுதல் ஊர்தரும் பசப்பே”
(குறுந்.205)
“குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவீ
வண்டுதரு நாற்றம் வளிகலந் தீயக்
கண்களி பெறூஉங் கவின்பெறு காலை
எல்வளை ஞெகிழ்த்தோர்க் கல்லல் உறீஇயர்
சென்ற நெஞ்சஞ் செய்வினைக் குசாவாய்
ஒருங்குவர னசையொடு வருந்துங் கொல்லோ
அருளா னாதலி னழிந்திவண் வந்து
தொன்னல னிழந்தவென் பொன்னிறம் நோக்கி
யேதி லாட்டி யிவளெனப்
போயின்று கொல்லோ நோய்தலை மணந்தே”
(நற்.56)
“வருவது கொல்லோ தானே வாராது
அவணுறை மேவலி னமைவது கொல்லோ
புனவர் கொள்ளியிற் புகல்வரு மஞ்ஞை
இருவி யிருந்த குருவி வெருவுறப்
பந்தாடு மகளிரிற் படர்தரும்
குன்றுகெழு நாடனொடு சென்றவென் னெஞ்சே”
(ஐங்குறு.295)
“பொரிப்புறப் பல்லிச் சினையீன்ற புன்னை
வரிப்புற வார்மணன்மே லேறித் - தெரிப்புறத்
தாழ்கடற் றண்சேர்ப்பன் தாரகலம் நல்குமேல்
ஆழியாற் காணாமோ யாம்”
(ஐந்திணை ஐம்.4)
என வரும்.
பெற்றவழி மலியினும் - தலைவி இடையீடின்றித்
தலைவனை
எதிர்ப்படப் பெற்றஞான்று புதுவது மலியினும்:
வரைவு நீட்டித்த காலத்துப் பெற்றவழி
மலிவை வெளிப்படக்
கூறுதலும், வரைவு நீட்டியாதவழிப் பெற்றவழி மலிவை வெளிப்படுத் தாமையும் உணர்க.
உ-ம்:
“இன்னிசை உருமொடு கனைதுளி தலைஇ
மன்னுயிர் மடிந்த பானாட் கங்குல்
காடுதேர் வேட்டத்து விளிவிடம் பெறாஅது
வரியதள் படுத்த சேக்கைத் தெரியிழைத்
தேனாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை
கூதிரிற் செறியுங் குன்ற நாட
வனைந்துவர லிளமுலை ஞெமுங்கப் பல்லூழ்
விளங்குதொடி முன்கை வளைந்துபுறஞ் சுற்ற
நின்மார் படைதலின் இனிதா கின்றே
நும்மில் புலம்பினும் உள்ளுதொறு நலியும்
தண்வரல் அசைஇய பண்பில் வாடை
பதம்பெறு கல்லாது இடம்பார்த்து நீடிய
மனைமர மொசிய வொற்றிப்
பலர்மடி கங்குல் நெடும்புற நிலையே.”
(அகம்.58)
முயக்கம் இனிதென மகிழ்ந்து கூறுவாள்