தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5298


 

கயிற் றூச றூங்கிக்
கொண்டல் இடுமணற் குரவை முனையின்
வெண்டலைப் புணரி ஆயமொ டாடி
மணிப்பூம் பைந்தழை தைஇ அணித்தகப்
பல்பூங் கானல் அல்கினம் வருதல்
கௌவை நல்லணங் குற்ற இவ்வூர்க்
கொடிதறி பெண்டிர் சொற்கொண் டன்னை
கடிகொண் டனளே தோழி பெருந்துறை
எல்லையு மிரவ மென்னாது கல்லென
வலவன் ஆய்ந்த வண்பரி
நிலவுமணல் கொட்குமோர் தேருண் டெனவே”  (அகம்.20)

“பெருங்கடற் றிரையது சிறுவெண் காக்கை
களிற்றுச் செவியன்ன பாசடை மயக்கிப்
பனிக்கழி துழவும் பானாட் டனித்தோர்
தேர்வந்து பெயரும் என்ப வதற்கொண்
டோரு மலைக்கு மன்ன பிறரும்
பின்னுவிடு கதுப்பின் மின்னிழை மகளிர்
இளையரு முதியரு முளரே
யலையாத் தாயரொடு நற்பா லோரே.”        (குறுந்.246)

இவை பிறர் கூற்றால் தமர் காத்தன.

“முலைமுகஞ் செய்தன முள்ளெயி றிலங்கின
தலைமுடி சான்ற தண்டழை யுடையை
அலமர லாயமொ டியாங்கணும் படாஅல்
மூப்புடை முதுபதி தாக்கணங் குடைய
காப்பும் பூண்டிசின் கடையும் போகலை
பேதை யல்லை மேதையங் குறுமகள்
பெதும்பைப் பருவத் தொதுங்கினை புறத்தென
ஒண்சுடர் நல்லில் அருங்கடி நீவித்
தன்சிதை வறித லஞ்சி யின்சிலை
யேறுடை யினத்த நாறுயிர் நவ்வி
வலைகாண் பிணையிற் போகி ஈங்கோர்
தொலைவில் வெள்வேல் விடலையொ டென்மகள்
இச்சுரம் படர்தந் தோளே ஆயிடை
அத்தக் கள்வ ராதொழு வறுத்தெனப்
பிற்படு பூசலின் வழிவழி யோடி
மெய்த்தலைப் படுதல் செய்யேன் இத்தலை
நின்னொடு வினவல் கேளாய் பொன்னொடு
புலிப்பற் கோத்த புலம்புமணித் தாலி
ஒலிக்குழைச் செயலை யுடைமா ணல்குல்
ஆய்சுளைப் பலவின் மேய்கலை யுதிர்த்த
துய்த்தலை வெண்காழ் பெறூஉம்
கற்கெழு சிறுகுடிக் கானவன் மகளே.”          (அகம்.7)

என்றன தோற்றப் பொலிவாற் காத்தன. இதற்கும் அவ்விண்டும் உள.

தன்குறி தள்ளிய தெருளாக்  காலை வந்தனன் பெயர்ந்த வறுங்களம்
நோக்கித் தன்  பிழைப்பாகத் தழீஇத்  தேறலும்  -  தலைவி  தன்னாற்
செய்யப்பட்ட  குறியிடங்கள்  இற்செறிப்பு   முதலிய   காரணங்களான்
இழக்கப்பட்டனவற்றை,  இவை   இழக்குமென   முந்துறவே  உணராத காலத்து, முற்கூறிய  குறியிடமே  இடமாக  வந்து   தலைவன்  கூடாது
பெயர்தலான்,  தமக்குப்   பயம்  படாத   வறுங்களத்தை   நினைந்து,
அதனைத் தலைவற்கு  முந்துறவே   குறிபெயர்த்திடப்  பெறாத  தவறு
தன்மேல்  ஏற்றிக்கொண்டு,   தோழியையும்   அது   கூறிற்றிலளெனத்
தன்னொடு  தழீஇக்  கொண்டு,  தலைவி  தெளிதற்கண்ணும்:  ஆகவே
அவன்  தவற்றைத்  தன்தவறு ஆக்கினளாம். தழீஇ-தோழியைத் தழீஇ.
அத்தவறு  அவன்கட்  செல்லாமல்  தனதாகத் தேறினாள்.

உ-ம்:

“விரியிணர் வேங்கை வண்டுபடு கண்ணியன்
தெரியிதழ்க் குவளைத் தேம்பாய் தாரன்
அஞ்சிலை யிடவ தாக வெஞ்செலற்
கணைவலந் தெரிந்து துணைபடர்ந் துள்ளி
வருதல் வாய்வது வான்றோய் வெற்பன்
வந்தன னாயின் அந்தளிர்ச் செயலைத்
தாழ்வி லோங்குசினைத் தொடுத்த வீழ்கயிற்
றூசன் மாறிய மருங்கும் பாய்புடன்
ஆடா மையிற் கலுழ்பில தேறி
நீடிதழ் தலைஇய கவின்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:28:59(இந்திய நேரம்)