தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5299


 

பெறு நீலங்
கண்ணென மலர்ந்த சுனையும் வண்பறை
மடக்கிளி யெடுத்தல் செல்லாத் தடக்குரற்
குவவுப் பொறை யிறுத்த கோற்றலை யிருவிக்
கொய்தொழி புனமும் நோக்கி நெடிதுநினைந்த
பைதலன் பெயரலன் கொல்லோஐதேய்கு
அயவெள் ளருவி சூடிய வுயர்வரைக்
கூஉங் கண்ணதெம் மூரென
ஆங்கதை யறிவுறன் மறந்திசின் யானே.”      (அகம்.38)

இதனுள்  ஊசன்மாறுதலும்   புனமுந்  தன்குறி   தள்ளிய   இடன்;
மறந்திசின்   என்றது    தெருளாக்காலை,   கூஉங்கண்ணது  ஊரென
உணர்த்தாமையின்;     இடையீடு       படுவதன்றி      அவன்கண்
தவறுண்டோவெனத்   தன்    பிழைப்பாகத்    தழீஇயினாள்.    இது
சிறைப்புறமாக வரைவுகடாயது.

வழுவின்றி நிலைஇய  இயற்படு பொருளினும் - வழுப்படுத்த லின்றி
நின்ற இயற்பட மொழிதற் பொருண்மைக் கண்ணும்:

வழுவின்றி   நிலைஇய  என்றதனான்  தோழி   இயற்பழித்துழியே
இயற்பட மொழிவதென்க.  தலைவன்  வழுவைத்  தோழி  கூறியதற்குப் பொறாது  தான்  இயற்பட  மொழிந்ததல்லது,  தன்  மனத்து   அவன்
பரத்தைமை கருதுதலுடைமையிற் பொருள் வேறு குறித்தாளாம்.

உ-ம்:

“அடும்பமல் நெடுங்கொடி உள்புதைந் தொளிப்ப
வெண்மணல் விரிக்குந் தண்ணந் துறைவன்
கொடியன் ஆயினும் ஆக
அவனே தோழியென் னுயிர்கா வலனே.”  (ஐங்.பக்கம்.144)

“தொடிநிலை நெகிழச் சாஅய்த் தோளவர்
கொடுமை கூறின வாயினும் கொடுமை
நல்வரை நாடற்கில்லை தோழிஎன்
நெஞ்சிற் பிரிந்ததூஉ மிலரே தங்குன்ற
நோக்கங் கடிந்ததூஉ மிலரே
நிலத்தினும் பெரிதே நேர்ந்தவர் நட்பே”

என வரும்.

இஃது  அகன்ற உயர்ந்து தாழ்ந்தவற்றின் பெரிதாகிய நட்புடையவன்
எனக்   கூறியது.   அவை   ஒருகாலைக்கு   ஒருகாற்  பெருகுமென்று
கூறினாளாயினும், நமது நட்புப்போல் ஒரு காலே  பெருத்ததில்லையென
இரண்டுங் கூறினாள்.

பொழுதும் ஆறும்  புரைவது  அன்மையின்  அழிவு  தலை  வந்த
சிந்தைக்கண்ணும்  -  தலைவியுந்  தோழியும்   தலைவன்   இரவுக்குறி
வருங்காற்     பொழுதாயினும்      நெறியாயினும்     இடையூறாகிப்
பொருந்துதலின்மையின்,    அழிவு    தலைத்தலை    சிறப்ப   வந்த
ஆராய்ச்சிக்கண்ணும்: ஆண்டும் அவ்விரண்டும் நிகழும்.

உ-ம்:

“மன்றுபா டவிந்து மனைமடிந் தன்றே
கொன்றோ
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:29:11(இந்திய நேரம்)