Primary tabs


ரன்ன கொடுமையோ டின்றே
யாமங் கொளவரிற் கனைஇக் காமங்
கடலினு முரைஇக் கரைபொழி யும்மே
எவன்கொல் வாழி தோழி மயங்கி
யின்ன மாகவு நன்னர் நெஞ்சம்
என்னொடும் நின்னொடுஞ் சூழாது கைம்மிக்கு
இறும்புபட் டிருளிய இட்டருஞ் சிலம்பிற்
குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக்
கான நாடன் வரூஉம் யானைக்
கயிற்றுப் புறத்தன்ன கன்மிசைச் சிறுநெறி
மாரி வானந் தலைஇ நீர்வார்பு
இட்டருங் கண்ண படுகுழி யியவின்
இருளிடை மிதிப்புழி நோக்கியவர்
தளரடி தாங்கிய சென்ற தின்றே.”
(அகம்.128)
காமங் கரைபொழியா நிற்கவும் என்ன நன்றி கருதி இருவரொடுஞ்
சூழாது சென்றது நெஞ்சென இரண்டுங் கூறினாள். மனைமடிந்தன்
றென்பது பொழுது; சிறு நெறியென்பது ஆற்றின்னாமை. இதனைப்
பொருளியலுட் (210) கூறாது தன் வயினுரிமையும்
அவன்வயின்
பரத்தைமையும் பற்றி ஈண்டுக் கூறினார்.
“குறையொன்றுடை யேன்மற் றோழி நிறையில்லா
மன்னுயிர்க்கேமஞ் செயல்வேண்டு மின்னே
அரவழங்கு நீள்சோலை நாடனை வெற்பில்
இரவார லென்ப துறை.”
(ஐந்திணை எழு.14)
“வளவாய்ச் சிறுகிளவி” என்னுங் (141) குறுந்தொகையும்
அது.
காமஞ் சிறப்பினும் - தலைவி காமஞ்சிறந்து தோன்றினும்:
உ-ம்:
“ஓலியவிந் தடங்கி யாமம் நள்ளெனக்
கலிகெழு பாக்கம் துயின்மடிந் தன்றே
தொன்றுறை கடவுள் சேர்ந்த பராரை
மன்றப் பெண்ண வாங்குமடற் குடம்பைத்
துணைபுண ரன்றில் உயவுக்குரல் கேட்டொறும்
துஞ்சாக் கண்ணள் துயரடச் சாஅய்
நம்வயின் வருந்து நன்னுத லென்பது
உண்டுகொல் வாழி தோழி தெண்கடல்
வன்கைப் பரதவர் இட்ட செங்கோற்
கொடுமுடி யவ்வலை பரியப் போகிக்
கடுமுரண் எறிசுறா வழங்கும்
நெடுநீர்ச் சேர்ப்பன்ற னெஞ்சத் தானே.”
(நற்.303)
“ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
இறையுற வோங்கிய நெறியயன் மராஅத்த
பிள்ளை உள்வாய்ச் செரீஇய
இரைகொண் டவையும் விரையுமாற் செலவே.” (குறுந்.92)
“கொடுந்தாள் அலவ குறையாம் இரப்பேம்
ஓடுங்கா வொலிகடற் சேர்ப்பன் - நெடுந்தேர்
கடந்த வழியையெம் கண்ணாரக் காண
நடந்து சிதையா தி நீ.”
(ஐந்திணை ஐம்.42)
“முடமுதிர் புன்னைப் படுகேட் டிருந்த
மடமுடை நாரைக் குரைத்தேன் - கடனறிந்து
பாய்திரைச் சேர்ப்பன் பரித்தேர் வரக்கண்டு
நீதகா தென்றே நிறுத்து.”
என வரும்.
அவன் அளி சிறப்பினும் - தலைவிக்குக்
காமமிக்க சுழிபடர்
சிறந்தாற்போல்வது தலைவன்கட் சிறந்துழி, அது காரணத்தான் அவன்
அளி சிறந்து தோன்றினும்;
இவ்வாறு அரிதின் வருகின்றான்
வரைகின்றிலனென அவ்விரண்டுந் தோன்றும்.
உ-ம்:
“இருள்கிழிப் பதுபோன் மின்னி வா