Primary tabs


னம்
துளிதலைக் கொண்ட நளிபெயல் நடுநாள்
மின்மினி மொய்த்த முரவுவாய்ப் புற்றம்
பொன்னெறி பிதிரிற் சுடர வாங்கிக்
குரும்பி கெண்டும் பெருங்கை யேற்றை
இரும்புசெய்கொல்லெனத் தோன்று மாங்கண்
ஆறே யருமர பினவே யாறே
சுட்டுநர்ப் பனிக்குஞ் சூருடை முதலைய
கழைமாய் நீத்தங் கல்பொரு திரங்க
அஞ்சுவந் தமிய மென்னாது மஞ்சுசுமந்
தாடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்
ஈருயிர்ப் பிணவின் வயவுப்பசி களைஇய
இருங்களி றட்ட பெருஞ்சின உழுவை
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
மேய்மணி விளக்கிற் புலர ஈர்க்கும்
வாணடந் தன்ன வழக்கருங் கவலை
யுள்ளுநர் உட்கும் கல்லடர்ச் சிறுநெறி
அருள்புரி நெஞ்சமோடு எஃகுதுணை யாக
வந்தோன் கொடியனும் அல்லன் தந்த
நீதவ றுடையையும் அல்லை நின்வயின்
ஆனா வரும்படர் செய்த
யானே தோழி தவறுடை யேனே.”
(அகம்.72)
‘வந்தோ னென்பது அவனளி
சிறத்தல்; ‘தவறுடையே’ னென்பது
தன்வயினுரிமை; ‘கொடியனுமல்ல’னென்பது அவன்வயிற் பரத்தைமை.
“சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி
வான மீனின் வயின்வயின்இமைக்கும்
ஓங்குமலை நாடன் சாதுபுலர் அகலம்
உள்ளின் உண்ணோய் மிகுமினிப்
புல்லின் மாய்வ தெவன்கொல் அன்னாய்.”
(குறுந்.150)
இதுவுமது.
ஏமஞ் சான்ற உவகைக் கண்ணும் - நால்வகைப் புணர்ச்சியான்
நிகழுங் களவின்கண், எஞ்ஞான்றும் இடையீடு படாமற்
றலைவன்
வந்து கூடுதல், இன்பத்திற்குப் பாதுகாவல்
அமைந்த உவகையினைத்
தலைவி எய்தியக்கண்ணும்:
அஃது எஞ்ஞான்றுங் கூட்டம் பெற்றமையான் மகிழ்ந்து கூறுதலாம்.
உ-ம்:
“நோயலைக் கலங்கிய மதனழி பொழுதில்
காமஞ் செப்பல் ஆண்மகற் கமையும்
யானென், பெண்ம தட்ப நுண்ணிதிற் றாங்கிக்
கைவல் கம்மியன் கவின்பெறக் கழாஅ
மண்ணாப் பசுமுத் தேய்ப்பக் குவியிணர்ப்
புன்னை அரும்பிய புலவுநீர்ச் சேர்ப்பன்
என்ன மகன்கொல் தோழி தன்வயின்
ஆர்வ முடைய ராகிய
மார்பணங்குறுநரை யறியா தோனே.”
(நற்.94)
‘மண்ணாப் பசுமுத்தேய்ப்ப நுண்ணிதிற்றாங்கிப்
பெண்மை தட்ப’
வென மாறிக் கழுவா