தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5304


 

செவிலியை யானுங் கதுமென எதிர்ப்பினும்:

உரையெனத்    தோழிக்கு    உரைத்தற்கண்ணும்   -  நொதுமலர்
வரைவிற்கு  மணமுரசியம்பியவழியானும்    பிறாண்டானுந்   தோழிக்கு
இன்னவாறு  கூட்டம்  நிகழ்ந்ததெனக்கூறி  அதனை  நமரறியக்  கூறல்
வேண்டுமென்றுந்    தலைவற்கு       நம்    வருத்தமறியக்   கூறல்
வேண்டுமென்றுங்  கூறுதற்கண்ணும்; தானே  கூறும் காலமும்  உளவே
-  இம்மூன்று  பகுதியினுந் தோழி வினாவாமல் தலைவி  தானே கூறுங்
காலமும் உள எ-று.

உம்மையான் தோழி வினவிய இடத்துக் கூறலே வலியுடைத்து.

உ-ம்:

“அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
மேக்கெழு பெருஞ்சினை யிருந்த தோகை
பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன்
தகாஅன் போலத் தான்தீது மொழியினுந்
தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே
முத்துநிரை யொத்த முள்ளெயிற்றுத் துவர்வாய்
வரையாடு வன்பறழ்த் தந்தைக்
கடுவனு மறியுமக் கொடியோ னையே.”        (குறுந்.26)

“யாரு மில்லைத் தானே களவன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தா ளன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீ ராரல் பார்க்குங்
குருகு முண்டுதா மணந்த ஞான்றே.”         (குறுந்.25)

இவற்றுள்  துறந்தான்போலவும்  மறந்தான் போலவுங்  கருதித்தான்
தீது  மொழியினு  மெனவும்  யானெவன்  செய்கோ  வெனவுந்  தோழி
வினவாக்காலத்து    அவன்    தவற்றை   வரைவிடை    வைத்தலின்
ஆற்றாமைக்கு அறிவித்தாள்.

பகலெரி சுடரின் மேனி சாயவும்
பாம்பூர் மதியி னுதலொளி கரப்பவும்
எனக்குநீ யுரையா யாயின் நினக்கியான்
உயிர்பகுத் தன்ன மாண்பினெ னாகலின்
அதுகண் டிசினால் யானே யென்றுநனி
அழுத லான்றிசின் ஆயிழை யொலிகுரல்
ஏனல் காவலி னிடையுற் றொருவன்
கண்ணியன் கழலன் தாரண் தண்ணெனச்
சிறுபுறங் கவையின னான வதற்கொண்டு
அஃதே நினைந்த நெஞ்சமோ
டிஃதா கின்றியா னுற்ற நோயே.”             (நற்.128)

இது தோழி வினாவிய வழித் தலைவி கூறியது.

‘வரைவிடைவைத்த  காலத்து வருந்தினும்’ என்பதனைத் ‘தொகுத்த
மொழியான் வகுத்தனர் கோடல்’
 (தொல்.பொ.666)  என்னுந்  தந்திர
வுத்தியாகக் கொண்டு அதன்கண் வேறுபட வருவனவெல்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:30:09(இந்திய நேரம்)