தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5305


 

லாங் கொள்க,

“உரைத்திசின் தோழியது புரைத்தோ வன்றே
அருந்துய ருழத்தலும் ஆற்றாம் அதன்றலைப்
பெரும்பிறி தாக லதனினு மஞ்சுதும்
அன்னோ இன்னும் நன்மலை நாடன்
பிரியா அன்பினர் இருவருமென்னும்
அலரதற் கஞ்சினன் கொல்லோ பலருடன்
துஞ்சூர் யாமத் தானுமென்
நெஞ்சத் தல்லது வரவறி யானே.”          (குறுந்.302)

இது வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கூறியது.

“அதுகொல் தோழி காமநோயே
வதிகுருகு உறங்கும் இன்னிழற் புன்னை
உடைதிரைத் திவலை யரும்புந் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே.”        (குறுந்.5)

என்னும் பாட்டும் அது.

“தோழி வாழி மேனாட் சாரற்
கொடியோர் குன்றம் பனிப்ப நெடிதுநின்று
புயறொடங் கின்றே பொய்யா வானம்
கனைவர லழிதுளி தலைஇ
வெம்முலை ஆகம் நனைக்குமெங் கண்ணே.”

இது வரைவிடைப் பருவங் கண்டு ஆற்றாது தோழிக்குக் கூறியது.

“பனிப்புத லிவர்ந்த பைங்கொடி யவரைக்
கிளிவா யொப்பின் ஒளிவிடு பன்மலர்
வெருக்குப்பல் லுருவின் முல்லையொடு கஞல
வாடை வந்ததன் தலையும் நோய்பொரக்
கண்டிசின் வாழி தோழி தெண்டிரைக்
கடலாழ் கலத்திற் றோன்றி
மாலை மறையுமவர் மணிநெடுங் குன்றே.”    (குறுந்.240)

இது பருவங்கண்டு ஆற்றாது தோழிக்குக் கூறியது.

“நோயுங் கைம்மிகப் பெரிதே மெய்யுந்
தீயுமிழ் தெறலின் வெய்தா கின்றே
பொய்யெனச் சிறிதாங் குயிரியர் பையென
முன்றிற் கொளினேர் நந்துவள் பெரிதென
நிரைய நெஞ்சத் தன்னைக் குய்த்தாண்
டுரையினி வாழி தோழி புரையின்
உண்ணேர் எல்வளை ஞெகிழ்த்தோன் குன்றத்
தண்ணல் நெடுவரை யாடித் தண்ணென
வியலறை மூழ்கிய வளியென்
பசலை யாகந் தீண்டிய சிறிதே.”             (நற்.236)

இது  வரைவிடை ஆற்றாமை  மிக்குழி  அவன்வரையின் முள்கிய
காற்று என் மெய்க்கட்படினும் ஆற்றலா மென்றது.

“அம்ம வாழி தோழி யவர்போல்
நம்முடைய வாழ்க்கை மறந்தன்று கொல்லோ
மனையெறி யுலக்கையின் தினைகிளி கடியுங்
கான நாடன் பிரிந்தெனத்
தானும் பிரிந்தன்றென் மாமைக் கவினே.”

இது வன்புறை யெதிரழிந்தது.

“சிறுபுன்மாலை சிறுபுன் மாலை
தீப்பனிப் பன்ன தண்வளி யசைஇச்
செக்கர் கொண்ட சிறுபுன் மாலை
வைகலும் வருதியா லெமக்கே
ஒன்றுஞ் சொல்லாயவர் குன்றகெழு நாட்டே.”

இது மாலைப்பொழுது கண்டு வருந்திக் கூறியது.

இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன்கண் அடக்குக.

“கேட்டிசின் வாழி தோழி யல்கற்
பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇ
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து
அமளி தைவந் தனெனே குவளை
வண்டுபடு மலரிற் சாஅய்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:30:23(இந்திய நேரம்)