தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5306


 

த்
தமியேன் மன்ற அளியேன் யானே.”          (குறுந்.30)

இது  வரைதற்குப்  பிரிய  வருந்துகின்றது என்னென்றாட்குக் கனவு
நலிவுரைத்தது.

“ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்
கோடை யவ்வளி குழலிசை யாகப்
பாடின் அருவிப் பனிநீர் இன்னிசைத்
தோடமை முழவின் துதைகுர லாகக்
கணக்கலை யிகுக்குங் கடுங்குரல் தூம்பொடு
மலைப்பூஞ் சாரல் வண்டியா ழாக
இன்பல் இமிழிசை கேட்டுக் கலிசிறந்து
மந்தி நல்லவை மருள்வன நோக்கக்
கழைவளர் அடுக்கத் தியலியா டும்மயில்
விழவுக்கள விறலியின் தோன்று நாடன்
உருவ வல்விற் பற்றி யம்புதெரிந்து
செருச்செய் யானை சென்னெறி வினாஅய்
புலர்குரல் ஏனற் புழையுடை யொருசிறை
மலர்தார் மார்பன் நின்றோற் கண்டோர்
பலர்தில் வாழி தோழி அவருள்
ஆரிருட் கங்குல் அணையொடு பொருந்தி
ஓரியா னாகுவ தெவன்கொல்
நீர்வார் கண்ணொடு நெகிழ்தோ ளேனே.”     (அகம்.82)

அவனை  ஆயத்தார்  பலருங்  கண்டாரென  வந்தோன்  முட்டிய
வாறும் அவருள் நெகிழ்தோளேன் யானேயெனத் தானே  கூறியவாறுங்
காண்க.

“தாழை குருகீனுந் தண்ணந் துறைவனை
மாழைமா னோக்கின் மடமொழி - நூழை
நுழையு மடமகன் யார்கொலென் றன்னை
புழையு மடைத்தாள் கதவு.” (கைந்நிலை.59)

“நகைநீ கேளாய் தோழி அல்கல்
வயநாய் எறிந்து வன்பறழ் தழீஇ
இளைய ரெய்துதன் மடக் கிளையோடு
நான்முலைப் பிணவல் சொலிய கானொழிந்
தரும்புழை முடுக்கர் ஆட்குறித்து நின்ற
தறுகட் பன்றி நோக்கிக் கானவன்
குறுகினன் தொடுத்த கூர்வாய்ப்பகழி
மடைசெலன் முன்பிற்றன் படைசெலச் செல்லா
தருவழி விலக்குமெம் பெருவிறல் போன்மென
எய்யாது பெயருங்குன்ற நாடன்
செறியரில் துடக்கலிற் பரீஇப் புரியவிழ்ந்து
ஏந்துகுவவு மொய்ம்பிற் பூச்சோர் மாலை
ஏற்றமில் கயிற்றின் எழில்வந்து துயல்வர
இல்வந்து நின்றோற் கண்டன ளன்னை
வல்லே யென்முக நோக்கி
நல்லை மன்னென நகூஉப்பெயர்ந் தோளே.”  (அகம்.248)

இவை வந்தேன் செவி
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:30:35(இந்திய நேரம்)