தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5311


 

மை கையற வரினுங்
களனும் பொழுதும் வரைநிலை விலக்கிக்
காதன் மிகுதி யுளப்படப்பிறவும்
நாடு மூரும் இல்லுங் குடியும்
பிறப்புஞ் சிறப்பும் இறப்ப நோக்கி
அவன்வயிற் றோன்றிய கிளவியொடு தொகைஇ
அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்
ஐயச் செய்கை தாய்க்கெதிர் மறுத்துப்
பொய்யென மாற்றி மெய்வழிக் கொடுப்பினும்
அவன்விலங் குறினும் களம்பெறக் காட்டினும்
பிறன்வரை வாயினும் அவன்வரைவு மறுப்பினும்
முன்னிலை யறனெனப் படுதலென் றிருவகைப்
புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும்
வரைவுடன் பட்டோற் கடாவல் வேண்டினும்
ஆங்கதன் தன்மையின் வன்புறை யுளப்படப்
பாங்குற வந்த நாலெட்டு வகையுந்
தாங்கருஞ் சிறப்பிற் றோழி மேன.

இது  முறையானே தோழி கூற்று நிகழும் இடம் பலவுந் தொகுத்துக்
கூறுகின்றது.

(இ-ள்.)  நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும்  உண்டியும் செய்வினை
மறைப்பும் செலவும் பயில்வும்  -  தலைவன்  பெட்ட  வாயில்  பெற்று
இரவுவலியுற்று    முன்னுறு     புணர்ச்சியை   உரைப்பின்   இன்னது
நிகழுமென்று  அறியாது  அஞ்சிக்   கரந்து  மதியுடம்படுப்பத்  தோழி
மதியுடம்படுங்கால் அவள் ஆராயும் ஆராய்ச்சி யெல்லாம்  நாட்டமாம்;
அஃது  எட்டாம்.  அவற்றுள்  முன்னுறு  புணர்ச்சியை  உணர்த்தற்குக்
காரணம் எழுவகைய, அவை நாற்ற முதலிய ஏழும்:

நாற்றமாவது,  ஓதியும் நுதலும்  பேதைப் பருவத்துக்குத் தக நாறாது
தலைவன்  கூட்டத்தான்  மான்மதச்சாந்து  முதலியனவும் பல பூக்களும்
விரவி நாறுதல்.

தோற்றமாவது,  நீண்டும்  பிறழ்ந்தும்  பிள்ளைப்பருவத்து வெள்ளை
நோக்கின்றி  உள்ளொன்று  கொள்ள  நோக்குங்  கண்ணுந்,  தந்நிலை
திரிந்து   துணைத்து   மெல்கிப்   பணைத்துக்    காட்டுந்  தோளும்
முலையுமென்று இன்னோரன்ன.

ஒழுக்கமாவது,  பண்ணையாயத்தொடு முற்றிலான் மணற் கொழித்துச்
சோறமைத்தல்  முதலியன முனிந்த  குறிப்பினளாய்ப் பெண்டன்மைக்கு
ஏற்ப ஒழுகுதல்.

உண்டியாவது,  பண்டு  பால்  முதலிய  கொண்டு  ஒறுத்து  ஊட்ட
உண்டு வருகின்றாள்,  இப்பொழுது ஆசாரமும்  நாணுங் காதலும் மீதூர
அதன்மேல் உவப்பு ஆண்டு இன்றி மிக ஒறுத்த உள்ளத்தளாதல்.

செய்வினை     மறைத்தலாவது,    முன்பு  போலாது  இக்காலத்து
நினைவுஞ் செயலுந் தலைவனொடு பட்ட
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:31:33(இந்திய நேரம்)