Primary tabs


னவே யாகலான் அவை பிறர்க்குப் புலனாகாமை மறைத்தல்; அஃது
ஆயத்தொடு கூடாது இடந்தலைப்பாட்டிற்கு ஏதுவாக நீங்கி நிற்றலாம்.
செலவாவது, பண்டுபோல் வேண்டியவாறு நடவாது
சீர்பெற நடந்து
ஓரிடத்துச் சேறல்.
பயில்வாவது, செவிலி முலையிடத்துத் துயில்
வேண்டாது பெயர்த்து
வேறோரிடத்துப் பயிறல். இன்சாரியை.
புணர்ச்சி எதிர்ப்பாடு - எதிர்ப்பாட்டுப் புணர்ச்சியென மாறுக. அது
கொடுப்பாரும்
அடுப்பாருமின்றி இருவருந்தமியராய் எதிர்ப்
பட்டுப்
புணரும் புணர்ச்சி. இவ்வொழுக்கம் பாங்கற் கூட்டத்திற்கு ஏதுவாகாது.
உள்ளுறுத்து வரூஉம் உணர்ச்சி
ஏழினும் உணர்ந்த பின்றை -
அப்புணர்ச்சி யெதிர்ப்பாடு நிகழ்ந்ததனைத்
தோழி தன்னுள்ளத்துள்ளே
வினாவி
வருகின்ற ஐயவுணர்வினை
அவ்வேழனானுந் தெளிந்து
புணர்ச்சி உண்டென்பதனை உணர்ந்த பின்றை:
இன்னதும் இன்னதுமாகிய ஏழென்க. அங்ஙனந் துணிந்த பின்னல்லது
தலைவிமாட்டுத் தோழி சொன்னிகழ்த்தாளென்றற்குப் ‘பின்றை’ யென்றார்.
உ-ம்:
“காம்பிவர் தோளுங் கருமதர் மழைக்கணும்
வீங்கிள முலையும் வேறுபட் டனவே
தாங்கரு நாற்றந் தலைத்தலை சிறந்து
பூங்கொடிக் கிவர்ந்த புகற்சியென வாங்கிற்
பகலும் கங்குலு மகலா தொழுகுமே
நன்றி யளவைத் தன்றிது
எவன்கொன் மற்றிவட் கெய்திய வாறே.”
இதனுள் நாற்றமுந் தோற்றமுஞ் செலவும் வந்தன.
“கண்ணுஞ் சேயரி பரந்தன்று நுதலும்
நுண்வியர் பொறித்து வண்டார்க் கும்மே
வாங்கமை மென்றோண் மடந்தை
யாங்கா யினள்கொ லென்னுமென் நெஞ்சே.” (சிற்றெட்டகம்)
“தெய்வத்தி னாயதுகொல் தெண்ணீர் புடையுடுத்த
வையத்து மக்களின் ஆயதுகொல் - நைவுற்று
வண்டார்பூங் கோதை வரிவளைக்கை வாணுதலாள்
பண்டைய ளல்லள் படி.”
இவையும் அவை.
“ஏனல் காவ லிவளும் அல்லள்
மான்வழி வருகுவன் இவனும் அல்லன்
நரந்தங் கண்ணி யிவனோ டிவளிடைக்
கரந்த வுள்ளமொடு கருதியது பிறிதே
எம்முன் நாணுநர் போலத் தம்முள்
மதுமறைந் துண்டோர் மகிழ்ச்சி போல
உள்ளத் துள்ளே மகிழ்ப
சொல்லு மாடுப கண்ணி னானே.”
இது புணர்ச்சி உணர்ந்தது.
“இவள்வயிற் செலினே யிவற்குடம்பு வறிதே
இவன்வயிற் செலினே யிவட்கு மற்றே
காக்கை யிருகணி னொருமணி போலக்