Primary tabs


இன்னும் வேறுபட வருவனவெல்லாம் ஈண்டு அடக்கிக் கொள்க.
நன்னயம் பெற்றுழி நயம்புரியிடத்தினும் - அங்ஙனந் தோழி கூறிய
குறையினை
அவள் அருளப் பெற்றவழி அதனைத் தலைவற்குக்
கூறுதற்கு விரும்புமிடத்தும்:
அவை தலைவனாற்றாமை கண்டு தோழி கையுறை யெதிர்தலும்,
இரவுக்குறியும் பகற்குறியும் நேர்தலுங், குறியிடங் காட்டலும், பிறவுமாம்.
உ-ம்:
“பொன்மெலியும் மேனியாள் பூஞ்சுணங்கின் மென்முலைகள்
என்மெலிய வீங்கினவே பாவமென் - றென்மெலிவிற்
கண்கண்ணி வாடாமை யானல்ல வென்றுரைத்தால்
உண்கண்ணி வாடா ளுடன்று.”
(திணை.நூற்.21)
இதனுட் கண்கண்ணி - குறுங்கண்ணி.
“நிலாவின் இலங்கு மணன்மலி மறுகிற்
புலாலஞ் சேரிப் புல்வேய் குரம்பை
ஊரென வுணராச் சிறுமையொடு நீருடுத்
தின்னா வுறையுட் டாயினு மின்பம்
ஒருநா ளுறைந்திசி னோர்க்கும் வழிநாள்
தம்பதி மறக்கும் பண்பி னெம்பதி
வந்தனை சென்மோ வளைமேய் பரப்ப
பொம்மற் படுதிரை கம்மென வுடைதரு
மரனோங் கொருசிறைப் பலபா ராட்டி
எல்லை யெம்மொடு கழிப்பி எல்லுற
நற்றேர் பூட்டலு முரியி ரற்றன்று
சேர்ந்தனிர் செல்குவி ராயின் யாமும்
எம்வரை அளவையிற் பெட்குவம்
நும்மொப் பதுவோ உரைத்திசி னெமக்கே”
(அகம்.200)
“கடும்புலால் புன்னை கடியுந் துறைவ
படும்புலாற் புட்கடிவான் புக்க - தடம்புலாந்
தாழைமா ஞாழற் றதைந்து யார்ந்த தாழ்பொழில்
ஏழைமா னோக்கி யிடம்”
(திணை.நூற்.44)
என வரும். இன்னும் ‘நயம்புரியிடத்தும்’ என்றதனான் அவன்
வரவினைத் தலைவிக்குக் கூறுதலுங் கொள்க.
“இவர்பரி நெடுந்தேர் மணியும் இசைக்கும்
பெயர்பட வியங்கிய விளையரு மொலிப்பர்
கடலாடு வியலணிப் பொலிந்த நறுந்தழைத்
திதலை யல்குல் நலம்பா ராட்டிய
வருமே தோழி வார்மணற் சேர்ப்பன்
நிறைபட வோங்கிய முழவுமுதற் புன்னை
மரவரை மறைகம் வம்மதி பானாட்
பூவிரி கானற் புணர்குறி வந்து