தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5323


 

நம்
மெல்லிணர் நறும்பொழிற் காணா
அல்ல லரும்படர் காண்கநாஞ் சிறிதே.”        (நற்.307)

இது,  தோழி  தலைவிக்குப் பகற்குறிக்கண் தலைவன் வருகின்றமை
காட்டி  அவன்  வருத்தங்  காண  யாம்  மறைந்து  நிற்பாம் வம்மோ
வெனக்கூறியது.

எண்ணரும்  பன்னகை கண்ணிய வகையினும் - தலைவன் இளிவந்
தொழுகுதற்குப்  பொறாத  தோழி   அவன்  இளிவரவு  உணர்த்துங்
கருத்தினளாய்ச்   செயற்கையாக   ஆராய்தற்கு   அரியவாய்  வரும்
ஒன்றல்லாப் பல நகை குறித்த பகுதிக்கண்ணும்:

அவை  ‘என்னை  மறைத்த  லெவனாகியர்’  என்றலும்,  அறியாள்
போறலுங்,   குறியாள்  கூறலும்,  படைத்துமொழி  கிளவியுங்,  குறிப்பு
வேறு கொளலும், பிறவுமாம்.

உ-ம்:

“நிறைத்திங்கள் சேர்ந்தோடு நீண்மலை நாட
மறைக்கப் படாதேனை மன்னு - மறைத்துக்கொண்
டோடினா யாதலா லொண்டொடியாள் தன்பக்கங்
கூடக் கிடந்ததொன்றில்.”

“மன்னோர்மன் சாய லவருண் மருடீர
இன்னார்கண் என்ப தறியேனான் - மின்னூருங்
கார்கெழு தோன்றற் கணமலை நன்னாட
யார்கண்ண தாகுங் குறை.”

“தன்னெவ்வங் கூரினும் நீசெய்த வருளின்மை
என்னையு மறைத்தாளென் தோழி யதுகேட்டு
நின்னையான் பிறர்முன்னர்ப் பழிகூறல் தானாணி.” (கலி.44)

இது, பழிகூறுவேனென்று தலைவி குறியாததொன்றைத் தோழி கூறினது.

“விருந்தின ராதலின் வினவுதிர் அதனெதிர்
திருந்துமொழி மாற்றந் தருதலும் இயல்பெனக்
கூறுவ தம்மயான் ஊறுபல வருமென
அஞ்சுவன் வாழிய ரைய வெஞ்சா
தெண்ணில ரெண்ணியது முடிப்பர்
கண்ணிலர் கொடியரிவ டன்னை மாரே.”

இது, நிகழாது நிகழ்வதாகப் படைத்து மொழிந்தது.

“நெறிநீ ரிருங்கழி நீலமுஞ் சூடாள்
பொறிமாண் வரியலவ னாட்டலு மாட்டாள்
சிறுநுதல் வேரரும்பச் சிந்தியா நின்றாட்
கெறிநீர்த்த
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:33:53(இந்திய நேரம்)