தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5324


 

ண் சேர்ப்பயா னென்சொல்லிச் செல்கோ.”

இது, குறிப்பு வேறு கொண்டாளென்றது.

புணர்ச்சி வேண்டினும்-தலைவன் பகற்குறியையும் இரவுக் குறியையும்
விரும்பிக் கூறுமிடத்தும்:

தோழிமேன கிளவி. அவை பலவகைய.

உ-ம்:

“நன்னலஞ் சிதைய நாடொறும் புலம்பப்
பொன்னிணர் வேங்கை துறுகற் றாஅய்
இரும்பிடி வெரூஉ நாடற்கோர்
பெருங்க ணோட்டஞ் செய்தன்றோ விலமே.”

இது, தோழி தலைவியைப் பகற்குறி நயப்பித்தது.

“மாயவனுந் தம்முனும் போலே மறிகடலுங்
கானலுஞ்சேர் வெண்மணலுங் காணாயோ - கானல்
இடையெலா ஞாழலும் தாழையும் ஆர்ந்த
புடையெலாம் புன்னை புகன்று.”         (திணை.நூற்.58)

“ஊர்க்கு மணித்தே பொய்கை பொய்கைக்குச்
சேய்த்து மன்றே சிறுகான் யாறே
இரைதேர் வெண்குரு கல்ல தியாவதுந்
துன்னல் போகின்றாற் பொழிலே யாமெங்
கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும்
ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே.”      (குறுந்.113)

இவை பகற்குறிநேர்ந்து இடங்காட்டின.

‘செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பின் செங்கோட் டியானைக்
கழறொடிச் சேஎய் குன்றங்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.”           (குறுந்.1)

இது, தோழி தலைவியை இடத்துயர்த்து நீங்கியது.

“ஆர்கலி வெற்பன் மார்புபுணை யாகக்
கோடுயர் நெடுவரைக் கவாஅன் பகலே
பாடின் னருவி யாடுத லினிதே
நிரையிதழ் பொருந்தாக் கண்ணோ டிரவிற்
பஞ்சி வெண்டிரிச் செஞ்சுடர் நல்லிற்
பின்னுவீழ் சிறுபுறந் தழீஇ
யன்னை முயங்கத் துயிலின் னாதே.”         (குறுந்.353)

இஃது இரவுக்குறி நயந்த  தலைவன்   சிறைப்புறமாகப்   பகற்குறி
நேர்வாள்போல் இரவுக்காப்புமிகுதி கூறியது.

‘பாடின்னருவி ஆட’ என்றாள் அதன்கண் உதவினானென்பது பற்றி;
அல்லது களவிற்கு உடன் ஆடுதலின்று.

“செறுவார்க் குவகை யாகத் தெறுவர
ஈங்கும் வருபவோ தேம்பாய் துறைவ
சிறுநா வொண்மணி விளரி யார்ப்பக்
கடுமா நெடுந்தேர் நேமி போகிய
இருங்கழி நெய்தல்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:34:05(இந்திய நேரம்)