தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5325


 

போல
வருந்தின ளளியணீ பிரிந்திசி னோளே.”      (குறுந்.336)

இது, தலைவன் இரவுக்குறி நயந்தவனைத் தோழி மறுத்தது.

“நாகுபிடி நயந்த முளைக்கோட் டிளங்களிறு
குன்ற நண்ணிக் குறவ ரார்ப்ப
மன்றம் போழு நாடன் றோழி
சுனைப்பூங் குவளைத் தொடலை தந்துந்
தினைப்புன மருங்கிற் படுகிளி யோப்பியுங்
காலை வந்து மாலைப் பொழுதில்
நல்லக நயந்துதான் உயங்கிச்
சொல்லவு மாகா தஃகி யோனே.”            (குறுந்.346)

இது, தோழி கிழத்தியை இரவுக்குறி நயப்பித்தது.

“தண்ணந் துறைவன் கடும்பரி மான்தேர்
காலை வந்து மாலை பெயரினும்
பெரிது புலம்பின்றே கானல்
சிறிது புலம்பினமால் தோழி நாமே.”

இது,  தலைவியது  ஆற்றாமைகண்டு  நம் வருத்தந் தீர்தற்கு இரவுக்குறியும் வேண்டுமென்றது.

“ஏனம் இடந்திட்ட வீர்மணிகொண் டெல்லிடைக்
கானவர் மக்கள் கனலெனக் கைகாய்த்தும்
வானுயர் வெற்பன் வருவான்கொல் தோழிநம்
மேனி பசப்புக் கெட.”                  (திணை.ஐம்.4)

இது தலைவன் வருவனென்றது.

“சுறவுப்பிற ழிருங்கழி நீந்தி வைகலும்
இரவுக்குறிக் கொண்கன் வந்தனன்
விரவுமணிக் கொடும்பூண் விளங்கிழை யோயே.”
                                   (சிற்றெட்டகம்)

இஃது இரவுக்குறி. தலைவன் வந்தமை தலைவிக்குக் கூறியது.

“அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைத்
தண்கயத் தமன்ற கூதளங் குழைய
இன்னிசை யருவிப் பாடு மென்னதூஉங்
கேட்டியோ வாழிவேண் டன்னைநம் படப்பை
ஊட்டி அன்ன வெண்டளிர்ச் செயலை
ஓங்குசினைத் தொடுத்த ஊசல் பாம்பென
முழுமுத றுமிய உருமெறிந் தன்றே
பின்னுங் கேட்டியோ வெனவுமஃதறியாள்
அன்னையுங் கனைதுயின் மடிந்தனள் அதன்றலை
மன்னுயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர்
வருவ ராயிற் பருவ மிதுவெனச்
சுடர்ந்திலங் கெல்வளை ஞெகிழ்ந்த நம்வயிற்
படர்ந்த வுள்ளம் பழுதின் றாக
வந்தனர் வாழி தோழி அந்தரத்
திமிழ்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:34:16(இந்திய நேரம்)