Primary tabs


றித் தவறு தலைப்பெய்து
கையொடு கண்டாய் பிழைத்தேன் அருளினி.”
(கலி.95)
என்பதும் அச்சமாதலின் இதன்கண் அடங்கும்.
(சென்று கை இகந்து பெயர்த்து உள்ளிய வழியும்) சென்று -
தலைவன் ஆற்றானாய்த் துனியைத் தீர்த்தற்கு அவளை அணுகச்
சென்று; கையிகந்து - அவன் மெய்க்கட் கிடந்த தவறுகண்டு தலைவி
ஆற்றாளாய் நீக்கி நிறுத்தலானே: பெயர்த்து -
அவன் ஒருவாற்றான்
அவளாற் றாமையைச் சிறிது
மீட்கையினாலே; உள்ளிய வழியும் -
அவள் கூடக்கருதிய விடத்தும்: தலைவன் கூற்று நிகழும்.
இதுவுந் துனிதீர்ப்பதொரு முறைமை கூறிற்று.
உ-ம்:
முற்கூறிய பாட்டுள்,
“அதிர்வில் படிறெருக்கி வந்தென் மகன்மேல்
முதிர்பூண் முலைபொருத ஏதிலாள் முச்சி
உதிர்துகள் உக்கநின் ஆடை ஒலிப்ப
எதிர்வளி நின்றாய்நீ செல்;
இனி எல்லாயாந், தீதிலேம் என்று தெளிப்பவுங்
கைந்நீவி
யாதொன்றும் எங்கண் மறுத்தர வில்லாயின்
மேதக்க வெந்தை பெயரனை யாங்கொள்வேந்
தாவா விருப்பொடு கன்றியாத் துழிச்செல்ம்
ஆபோற் படர்தக நாம்.”
(கலி.81)
எனத் தலைவன் கூறியவாறு காண்க.
காமத்தின் வலியும் - அவள் அதுனித்து
நீங்கியவழி முற்கூறிய
வாறன்றிக் காமஞ் சிறத்தலின்
ஆற்றாமைவாயிலாகச் சென்று வலிந்துப்
புக்கு நெருங்கிக் கூடுமிடத்தும்: தலைவன் கூற்று
நிகழும்.
இதுவுந் துனி தீர்ப்பதொரு முறைமை கூறிற்று.
உ-ம்:
“யாரிவ னெங்கூந்தல் கொள்வா னிதுவுமோர்
ஊராண்மைக் கொத்த படியுறுடைத் தெம்மனை
வாரல்நீ வந்தாங்கே மாறு”
(கலி.89)
என வலிந்து சென்றதனைத் தலைவி கூறியவழி,
“ஏஎ, இவை, ஓருயிர்ப் புள்ளின் இருதலை யுள்