தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5402


 

கருமமே செய்தானென்று அன்பில் திரியாரென்பதூஉங் கூறியவாறு.

உ-ம்:

“நின்ற சொல்லர் நீடு தோன் றினியர்
என்றும் என்றோள் பிரிபறி யலரே
தாமரைத் தண்டா தூதி மீமிசைச்
சாந்திற் றொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீரின் றமையா வுலகம் போலத்
தம்மின் றமையா நந்நயந் தருளி
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை யுறுபவோ செய்பறி யலரே.”              (நற்.1)

இதனுள், தாமரைத்தாதையும் ஊதிச் சந்தனத்தாதையும் ஊதி வைத்த
தேன்போலப்  புரைய  என்றதனான்  ஏற்றற்கண்  தலைவி  கூறினாள்.
பிரிவறியலரென்றதும்     அன்னதொரு   குணக்குறையில ரென்பதாம்.
பிரிவுணர்ந்து புலந்துரைப்பின் நாணழிவாம்.

“நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற்
கருங்கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.”     (குறுந்.3)

இது, நிறுத்தற்கட் கூறியது.

கிழவனை மகடூஉப்புலம்பு பெரிதாகலின் அலமரல் பெருகிய காமத்து
மிகுதியும் - அறமும்   பொருளுஞ்    செய்வதனாற்   புறத்துறைதலில்
தலைவனைத்   தலைவி    நீங்குங்காலம்   பெரிதாகலின்   அதற்குச்
சுழற்சிமிக்க வேட்கைமிகுதி நிகழ்ந்தவிடத்தும்:

உ-ம்:

“காமந் தாங்குமதி யென்போர் தாமஃ
தறியலர் கொல்லோ அனைமது கையர்கொல்
யாமெங் காதலர்க் காணே மாயிற்
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்
கல்பொரு சிறுநுரை போல
மெல்ல மெல்ல இல்லா குதுமே.”             (குறுந்.290)

இது, தெருட்டுந் தோழிக்குத் தலைவி காமத்து மிகுதிக்கட் கூறியது.

இன்பமும்    இடும்பையும் ஆகிய இடத்தும் - அங்ஙனம் அலமரல்
பெருகியவழித் தலைவனை  எதிர்ப்பட்ட ஞான்று இன்பமுந், தனிப்பட்ட
ஞான்று துன்பமும் உளவாகிய இடத்தும்:

உ-ம்:

“வாரல் மென்தினைப் புலவுக்குரல் மாந்திச்
சாரல் வரைய கிளையுடன் குழீஇ
வளியெறி வயிரிற் கிளிவிளி பயிற்றும்
நளியிருஞ் சி
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:49:18(இந்திய நேரம்)