Primary tabs


மலை நாடன்
புணரிற் புணருமார் எழிலே பிரியின்
மணிமிடை பொன்னின் மாமை சாயவென்
அணிநலஞ் சிதைக்குமார் பசலை யதனால்
அசுணங் கொல்பவர் கைபோல் நன்றும்
இன்பமுந் துன்பமும் உடைத்தே
தண்கமழ் நறுந்தார் விறலோன் மார்பே.”
(நற்.304)
“இன்க ணுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்க ணுடைத்தாற் புணர்வு” (குறள்.1152)
என வரும்.
கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி நயந்த கிழவனை நெஞ்சு
புண்ணுறீஇ நளியின் நீக்கிய இளிவரு நிலையும் - யானைக் கன்று
போலும் புதல்வன் பிறத்தலான் உளதாகிய விருப்பத்தை யுடைய
நெய்யணிக்கு விரும்பிய தலைவனை நெஞ்சை வருத்தித் தன்னைச்
செறிதலினின்று நீக்கிய இளிவந்த நிலைமைக்கண்ணும்:
தன்னை அவமதித்தானென்றற்கு இளிவரு நிலையென்றார்.
“கரும்புநடு பாத்தியிற் கலித்த ஆம்பல்
சுரும்புபசி களையும் பெரும்புனல் ஊர
புதல்வனை யீன்றஎம் முயங்கல்
அதுவே தெய்யநின் மார்புசிதைப் பதுவே.” (ஐங்குறு.65)
இது, புதல்வற் பயந்தகாலத்துப் பிரிவுபற்றிக் கூறியது.
புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு அகன்ற கிழவனை-
புதல்வனை விளையாட்டை விரும்பின உள்ளத்தோடே புதுவது
புணர்ந்த பரத்தையர் தன்மாட்டு மனநெகிழ்ந்த மென்மையின் பொருட்டு
அவர்க்கு அருள்செய்யப் பிரிந்து வந்தோனை; புலம்பு நனி
காட்டி - தனது தனிமையை மிகவும் அறிவித்து; இயன்ற நெஞ்சந்
தலைப் பெயர்த்து அருக்கி - அவன் மேற்சென்ற
நெஞ்சினைச்
செல்லாமல் அவனிடத்தினின்றும் மீட்டு அருகப்பண்ணி; எதிர்பெய்து
மறுத்த ஈரத்து மருங்கினும் - பிறருள் ஒருத்தியைக் காணாளாயினுங்
கண்டாள்போலத் தன்முன்னர்ப் பெய்துகொண்டு வாயில்
மறுத்ததனான் தோற்றிய நயனுடைமைக்கண்ணும்:
எனவே, மறுப்பாள்போல் நயந்தாளாயிற்று. கிழவனை மறுத்த
வெனக் கூட்டுக.
உ-ம்:
“கடல்கண் டன்ன கண்ணகன் பரப்பில்
நிலம்பக வீழ்ந்த வேர்முதிர் கிழங்கின்
கழைகண் டன்ன தூம்புடைத் திரள்கால்
களிற்றுச் செவியன்ன பாசடை மருங்கின்
கழுநிவந் தன்ன கொழுமுகை இடையிடை
முறுவன் முகத்திற் பன்மலர் தயங்