தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5407


 

வந்து விரைவனென் கவைஇக்
களவுடம் படுநரின் கவிழ்ந்து நிலங் கிளையா
நாணி நின்றோள் நிலைகண்டு யானும்
பேணினேன் அல்லெனோ மகிழ்ந வானத்து
அணங்கருங் கடவுள் அன் னோள்நின்
மகன்தாய் ஆதல் புரைவதாங் கெனவே.”      (அகம்.16)

என வரும்.

(சிறந்த செய்கை    அவ்வழித்  தோன்றி  அறம்புரி உள்ளமொடு
தன்வரவு    அறியாமைப்    புறஞ்செய்து    பெயர்த்தல்  வேண்டு 
இடத்தானும்) சிறந்த  செய்கை  அவ்வழித்தோன்றி - காமக்கிழத்தியது
ஏமுறும் விளையாட்டுப்  போலாது   தலைவி   தன்    புதல்வனைத்
தழீஇ   விளையாட்டையுடைய   இல்லிடத்தே  தலைவன்  தோன்றி;
அறம்புரி   உள்ளமொடு   தன்வரவு அறியாமைப் புறஞ்செய்து -அவ்
விளையாட்டு   மகிழ்ச்சியாகிய  மனையறத்தினைக்  காண  விரும்பிய
நெஞ்சோடே தன்  வரவினைத் தலைவி அறியாமல் அவள்   பின்னே
நிற்றலைச்செய்து;   பெயர்தல்   வேண்டு   இடத்தானும் -தலைவியது
துனியைப் போக்குதல் வேண்டிய இடத்தும்:

‘தன்வரவறியாமை’  என்றதற்குத் தன்னைக் கண்டால் தலைவியுழை
நின்றார்   தனக்குச்  செய்யும் ஆசாரங்களையும்  அவர்   செய்யாமற்
கைகவித்துத் தன் வரவு அறியாமை நிற்பனென்று கொள்க.

உ-ம்:

மையற விளங்கிய மணிமருள் அவ்வாய்தன்
மெய்பெறா மழலையின் விளங்குபூண் நனைத்தரப்
பொலம்பிறை யுட்டாழ்ந்த புனைவினை உருள்கலன்
நலம்பெறு கமழ்சென்னி நகையொடு துயல்வர
வுருவெஞ்சா திடைகாட்டும் உடைகழல் அந்துகில்
அரிபொலி கிண்கிணி ஆர்ப்போவா தடிதட்பப்
பாலோடு அலர்ந்த முலைமறந்து முற்றத்துக்
கால்வல்தேர் கையின் இயக்கி நடைபயிற்றா
ஆலமர் செல்வன் அணிசால் பெருவிறல்
போல வருமென் உயிர்;
பெரும, விருந்தொடு கைதூவா எம்மையும் உள்ளாய்
பெருந்தெருவிற் கொண்டாடி ஞாயர் பயிற்றத்
திருந்துபு நீகற்ற சொற்கள்யாங் கேட்ப
மருந்தோவா நெஞ்சிற் கமிழ்தயின் றற்றாப்
பெருந்தகாய் கூறு சில;
எல்லிழாய்,
சேய்நின்று நாங்கொணர்ந்த பாணன் சிதைந்தாங்கே
வாயோடி யேனாதிப் பாடிய மென்றற்றா
நோய்நா

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:50:16(இந்திய நேரம்)