தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5420


 

செய்ததை யிம்மையே யாம்போலும
உம்மையா மென்பவ ரோரார்காண் - நம்மை
எளிய ரென நினைந்த வின்குழலா ரேடி
தெளியச் சுடப்பட்ட வாறு.”              (திணை.நூற்.123)

இது, குழல் கேட்டுத் தோழிக்குக் கூறியது.

“பெருங்கடல் திரையது சிறுவெண் காக்கை
நீத்துநீ ரிருங்கழி யிரைதேர்ந் துண்டு
பூக்கமழ் பொதும்பர்ச் சேக்குந் துறைவனோடு
யாத்தேம் யாத்தன்று நட்பே
அவிழ்த்தற் கரிதது முடிந்தமைந் தன்றே.”      (குறுந்.313)

இது, தலைவன் தவறிலனென்று கூறியது.

“உடலினே னல்லேன் பொய்யா துரைமோ
யாரவள் மகிழ்ந்த தானே தேரொடு
தளர்நடைப் புதல்வனை யுள்ளிநின்
வளமனை வருதலும் வௌவி யோளே.”       (ஐங்குறு.66)

இது, புதல்வனை நீங்கியவழிக் கூறியது.

“கண்டனெ மல்லமோ மகிழ்நநின் பெண்டே
பலரொடு பெருந்துறை மலரொடு வந்த
தண்புனல் வண்ட லுய்த்தென
உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே.”       (ஐங்குறு.69)

இது, காமஞ்சாலா விளமையோளைக் களவின் மணந்தமை  அறிந்தே
னென்றது.

வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ - வாயில் தன்  ஏதுவாகத்
தலைவிக்கு வருங் கூற்று வகையொடு கூட்டி:

வாயில்களாவார் செய்யுளியலுட்  (512)  கூறும் பாணன் முதலியோர்.
‘வகை’யென்றதனான் ஆற்றாமையும் புதல்வனும்   ஆடைகழுவுவாளும்
பிறவும் வாயிலாதல் கொள்க.

“கொக்கினுக் கொழிந்த தீம்பழங் கொக்கின்
கூம்புநிலை யன்ன முகைய வாம்பல்
தூங்குநீர்க் குட்டத்துத் துடுமென வீழுந்
தண்டுறை யூரன் தண்டாப் பரத்தமை
புலவா யென்றி தோழி புலவேன்
பழன யாமைப் பாசறைப் புறத்துக்
கழனி காவலர் சுடுநந் துடைக்குந்
தொன்றுமுதிர் வேளிர் குன்றூ ரன்னவென்
நன்மனை நனிவிருந் தயருங்
கைதூ வின்மையி னெய்தா மாறே.”             (நற்.280)

இந் நற்றிணை தலைவனொடு புலவாமை
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:52:50(இந்திய நேரம்)