தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5421


 

போவென்ற   தோழிக்கு   விருந்தாற்  கைதூவாமையின்  அவனை
எதிர்ப்படப பெற்றிலேனல்லது புலவேனோ எ-று.

“அன்னா யிவனோ ரிளமா ணாக்கன்
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ
இரந்தூ ணிரம்பா மேனியொடு
விருந்தி னூரும் பெருஞ்செம் மலனே.”         (குறுந்.33)

இது, பாணன் சொல்வன்மைக்குத் தோற்று வாயில் நேர்ந்த  தலைவி
தோழிக்கு உரைத்தது.

“காண்மதி பாணநீ யுரைத்தற்குரியை
துறைகெழு கொண்கன் பிரிந்தென
இறைகே ழெல்வளை நீங்கிய நிலையே.”      (ஐங்குறு.140)

இது,   பரத்தையிற்   பிரிந்துழி   இவன் நின் வார்த்தையே கேட்ப
னென்பது தோன்றப் பாணற்குத் தலைவி கூறியது.

“ஆடியல் விழவி னழுங்கன் மூதிர்
உடையோர் பான்மையிற் பெருங்கை தூவா
அறனில் புலத்தி யெல்லித் தோய்த்த
புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர வோடிப்
பெருங்கயிறு நாலு மிரும்பனம் பிணையற்
பூங்க ணாயம் ஊக்க வூங்காள்
அழுதனள் பெயரு மஞ்சி லோதி
நல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள்
ஊச லுறுதொழிற் பூசற் கூட்டா
நயனின் மாக்களொடு குழீஇப்
பயனின் றம்மவிவ் வேந்துடை யவையே.”         (நற்.90)

இது பாணனைக் குறித்துக் கூறியது.

“நெய்யுங் குய்யு மாடி மெய்யொடு
மாசுபட் டன்றே கலிங்கமுந் தோளுந்
திதலை மென்முலைத் தீம்பால் பிலிற்றப்
புதல்வற் புல்லிப் புனிறுநா றும்மே
வாலிழை மகளிர் சேரித் தோன்றுந்
தேரோற் கொத்தனெ மல்லே மதனாற்
பொன்புரை நரம்பி னின்குரற் சீறியாழ்
எழாஅல் வல்லை யாயினுந் தொழாஅல்
கொண்டுசெல் பாணநின் தண்டுறை யூரனைப்
பாடுமனைப் பாடல் கூடாது நீடுநிலைப்
புரவியும் பூணிலை முனிகுவ
விரகில மொழியல்யாம் வேட்டதில் வழியே.”     (நற்.380)

இது பாணனுக்கு வாயின் மறுத்த
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:53:01(இந்திய நேரம்)