தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5425


 

திறத்தாற் சோர்வுகண் டழியினும்
பெரியோ ரொழுக்கம பெரிதெனக் கிளந்து
பெறுதகை யில்லாப் பிழைப்பினு மவ்வயின்
உறுதகை யில்லாப் புலவியுள் மூழ்கிய
கிழவோள்பா னின்று கெடுத்தற் கண்ணும்
உணர்ப்புவயின் வாரா வூடலுற் றோள்வயின்
புணர்த்தல் வேண்டிய கிழவோன்பா னின்று
தான்வெகுண் டாக்கிய தகுதிக் கண்ணும்
அருமைக் காலத்துப் பெருமை காட்டிய
எண்மைக் காலத் திரக்கத் தானும்
பாணர் கூத்தர் விறலிய ரென்றிவர்
பேணிச் சொல்லிய குறைவினை யெதிரும்
நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக்
காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும்
பிரியுங் காலை யெதிர் நின்று சாற்றிய
மரபுடை யெதிரு முளப்படப் பிறவும்
வகைபட வந்த கிளவி யெல்லாந்
தோழிக் குரிய வென்மனார் புலவர்.

இது, முறையானே தோழிக்குரிய கூற்றுக் கூறுகின்றது.

(இ-ள்.)  (பெறற்கு  அரும்  பெரும்  பொருள்  முடிந்தபின்  வந்த
தெறற்கு அரும் மரபிற் சிறப்பின்கண்ணும்)  பெறற்கு  அரும்   பெரும்
பொருள்   முடிந்தபின்   வந்த  -  தலைவனுந்  தலைவியுந் தோழியும்
பெறுதற்கரிதென   நினைத்த   பெரிய பொருளாகிய வதுவை வேள்விச்
சடங்கான் முடிந்தபின்பு தோன்றிய; தெறற்கு அரும்  மரபிற்   சிறப்பின்
கண்ணும்  -  தனது  தெறுதற்கரிய    மரபுகாரணத்தான்    தலைவன்
தன்னைச்   சிறப்பித்துக் கூறுமிடத்தும்; தோழி கூற்று நிகழும்.

தலைவியையுந்     தலைவனையும்   வழிபாடாற்றுதலின் ‘தெறற்கரு
மரபின்’ என்றார்.   தெறுதல்   -   அழன்று    நோக்குதல்.   சிறப்பு,
இவளை  நீ ஆற்றுவித்தலின்  எம்  உயிர்    தாங்கினேம்    என்றாற்
போல்வன.   அவை எம்பெருமானே   அரிதாற்றிய   தல்லது   யான்
ஆற்றுவித்தது    உண்டோ   வென்றானும்    நின் அருளான்  இவள்
ஆற்றிய    தல்லது   யான்  ஆற்றுவித்தது     உண்டோவென்றானுங்
கூறுவனவாம்.

“அயிரை பரந்த அந்தண் பழனத்
தேந்தெழின் மலரத் தூம்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:53:48(இந்திய நேரம்)