Primary tabs


புடைத் திரடாள்
ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவள்
இடைமுலைக் கிடந்து நடுங்க லானீர்
தொழுதுகாண் பிறையின் தோன்றி யாம்நுமக்
கரியே மாகிய காலைப்
பெரிய நோன்றனிர் நோகோ யானே.” (குறுந்.178)
இதனுண் முலையிடைக் கிடந்தும் பனிக்கின்ற நீர் அரியமாகிய
காலத்து எங்ஙனம் ஆற்றினீரென யான் நோவாநின்றேன்.
இங்ஙனம் அருமை செய்தலான் தேற்றுதற்கு உரியோனாகிய
என்னைச் சிறப்பித்துக் கூறல் ஆகாது என்றவாறு காண்க.
“பொங்குதிரை பொருத வார்மண லடைகரைப்
புன்கா னாவற் பொதிப்புற விருங்கனி
கிளைசெத்து மொய்த்த தும்பி பழஞ்செத்துப்
பல்கா லலவன் கொண்டகோட் கூர்ந்து
கொள்ளா நரம்பி னிமிரும் பூசல்
இரைதேர் நாரை யெய்திய விடுக்குந்
துறைகெழு மாந்தை யன்ன விவள்நலம்
பண்டு மிற்றே கண்டிசிற் றெய்ய
உழையிற் போகா தளிப்பினுஞ் சிறிய
ஞெகிழ்ந்த கவினலங் கொல்லோ மகிழ்ந்தோர்
கட்கழி செருக்கத் தன்ன
காமங் கொல்லிவள் கண்பசந் ததுவே.” (நற்.35)
இதனுள் தலைவி கனியாகவுந் தும்பி தோழியாகவும் அலவன்
தன்மேல் தவறிழைக்குந் தமராகவுந் தலைவன் இரைதேர்
நாரையாகவும் உள்ளுறையுவமங் கொள்வுழித் தலைவி பொருட்டு
யாய்க்கு அஞ்சி யொழுகினேனை நீ காத்ததன்றி யான்
ஆற்றுவித்தது உளதோவெனத் தலைவன் சிறப்பிற்கு எதிர் தோழி
கூறியவாறு காண்க. ‘பண்டும் இற்றே’ என்றது பண்டையின் மிகவும்
வருந்தினாளென்றாள். இவள் கண் நீண்டு பசந்தது, களவின்கண்
நீங்காது அளியாநிற்கவுஞ் சிறிது கெட்ட அழகின் மிகுதியோ,
கள்ளுண்டார்க்குக் கள் அறூஉங் காலத்துப் பிறந்த வேறுபாடு
போலுங் காம வேறுபாடோ, அவ்விரண்டு