தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5432


 

நிகழும்.

உ-ம்:

“பகல்கொள் விளக்கோ டிராநா ளறியா
வென்வேற் சோழர் ஆமூர் அன்னவிவள்
நலம்பெறு சுடர்நுதல் தேம்ப
எவன்பயஞ் செய்யுநீ தேற்றிய மொழியே.”     (ஐங்குறு.56)

இதனுள் இவள் நுதல்  தேம்பும்படி  நீ   தேற்றிய  சொல்லெனவே
சோர்வுகண்டு    அழிந்தாளென்பது     உணர்ந்தும்   இப்பொய்ச்சூள்
நினக்கு என்ன பயனைத்  தருமெனத்  தோழி  தலைவனை   நோக்கிக்
கூறியவாறு காண்க.

“கோடுற  நிவந்த”  (அகம்.266) என்னும்  மணிமிடை  பவளத்தைத்
தோழி கூற்றாகக் காட்டுவாரும் உளர்.

(பெரியோர் ஒழுக்கம் பெரிது எனக்  கிளந்து  பெறுதகை  இல்லாப்
பிழைப்பினும்)    பெரியோர்  பெறுதகை  இல்லாக்   கிளந்து  -  நன்
மக்கள்   பெறுந்தகைமை    இல்லறமாயிருக்கு   மென்றுஞ்  சொல்லி;
பெரியோர்  ஒழுக்கம் பெரிதெனக்   கிளந்து   பிழைப்பினும்  -   நன்
மக்கள்  ஒழுகும் ஒழுக்கம் பெரிதாயிருக்குமென்றுஞ்  சொல்லித்  தான்
தலைவனை வழிபாடு   தப்பினும்: தோழிக்குக் கூற்று நிகழும்.

பெரியோரையுங் கிளந்தென்பதனையும் இரண்டத்துங் கூட்டுக.

உ-ம்:

“வெள்ளி விழுத்தொடி மென்கருப் புலக்கை
வள்ளி நுண்ணிடை வயின்வயி னுடங்க
மீன்சினை யன்ன வெண்மணற் குவைஇக்
காஞ்சி நீழல் தமர்வளம் பாடி
ஊர்க்குறு மகளிர் குறுவழி விறந்த
இறால் அருந்திய சிறுசிரல் மருதின்
தாழ்சினை யுறங்குந் தண்டுறை யூர
விழையா வுள்ளம் விழைவ தாயினுங்
கோட்டவை தோட்டி யாக மீட்டாங்
கறனும் பொருளும் வழாஅமை நாடித்
தற்றக வுடைமை நோக்கி மற்றதன்
பின்னா கும்மே முன்னியது முடித்தல்
அனைய பெரியோ ரொழுக்க மதனால்
அரிய பெரியோர்த் தேருங் காலை
நும்மோ ரன்னோர் மாட்டு மின்ன
பொய்யொடு மிடைந்தவை தோன்றின்
மெய்யாண் டுளதோவிவ் வுலகத் தானே.”      (அகம்.286)

இதனுள் ‘அற’னென்றது இல்லறத்தை; ‘தற்றகவுடைமை நோக்கி’ யெ
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:55:10(இந்திய நேரம்)