Primary tabs


ன்றது தன்னான் அவ்வறனும் பொருளுந் தகுதிப் பாடுடையவாந்
தன்மையைநோக்கி என்றவாறாம்; ‘முன்னிய’ தென்றது புறத்தொழுக்
கத்தை; ‘பெரியோரொழுக்கமனைய’ வென்றது பெரியோர் ஒழுக்கம்
பெரிய வென்றவாறு.
இது முன்னர் நிகழ்ந்த பொய்ச்சூள்பற்றி நும்மனோர் மாட்டும் இன்ன
பொய்ச்சூள் பிறக்குமாயின் இவ்வுலகத்து மெய்ச்சூள் இனி
இன்றாம். அதனாற் பெரியோரைத் தமது ஒழுக்கத்தைத்
தேருங்காலை அறியவாயிருந்தனவெனத் தலைவனை நோக்கித் தோழி
கூறலின் அவனை வழிபாடு தப்பினாளாயிற்று. உள்ளுறையுவமம் இதற்கு
ஏற்குமா றுணர்க.
அவ் வயின் உறுதகை இல்லாப் புலவியுண் மூழ்கிய கிழவோள் பால்
நின்று கெடுத்தற்கண்ணும் - தலைவன் அங்ஙனம் பிறழ்ந்த இடத்து
அவன் சென்று சேருந் தகைமை இல்லாமைக்குக் காரணமாகிய
புலவியின்கண் அழுந்திய தலைவிபக்கத்தாளாய் நின்று அவள்
புலவியைத் தீர்த்தற்கண்ணும்:
உ-ம்:
“மானோக்கி நீயழ நீத்தவ னானாது
நாணில னாயி னலிதந் தவன்வயின்
ஊடுத லென்னோ வினி.” (கலி.87)
“உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது
மிக்கற்றா னீள விடல்.” (குறள்.130-2)
“காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி
வாலிழை மகளிர் மரீஇய சென்ற
மல்ல லூரன் எல்லினன் பெரிதென
மறுவருஞ் சிறுவன் தாயே
தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே.” (குறுந்.45)
(உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின் உணர்த்தல்
வேண்டிய கிழவோன்பால் நின்று தான் வெகுண்டு ஆக்கிய
தகுதிக்கண்ணும்) உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின் -
தலைவன் தெளிவிக்கப்படுந் தன்மைக்கணில்லாத ஊடல்
மிகுத்தோளிடத்து:
உணர்ப்புப் ‘புணர்ப்புப்’போல் நின்றது.
உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று - ஊடல் தீர்த்தலை
விரும்பிய தலைவன் வயத்தாளாய் நின்று; தான் வெகுண்டு
ஆக்கிய தகுதிக்கண்ணும் - தான் தலைவியைக் கழறி அவள் சீற்றம்
போந்தன்மை உண்டாக்கிய தகுதிக் கண்ணும்:
உ-ம்:
“துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை
அரிமலர் ஆம்பல் மேய்ந்த நெறிமருப்
பீர்ந்தண் எருமைச் சுவல்படு முதுபோத்துத்
தூங்குசேற் றள்ளல் துஞ்சிப் பொழுதுபடப்
பைந்நிண