Primary tabs


மறுத்த பின்னர் வாயிலாகக் கொண்டு புகுந்த வாயிலின்கண்ணும்:
உ-ம்:
“என்குறித் தனன்கொல் பாணநின் கேளே
வன்புறை வாயி லாகத் தந்த
பகைவரும் நகூஉம் புதல்வனை
நகுவது கண்டு நகூஉ மோரே.”
இதனுள் வன்புறை வாயிலாகிய புதல்வனைக் கண்டு நகுவாரைத்
தனக்கு நகுவாரைப்போல நகாநின்றானெனக் காமக்கிழத்தி கூறி
வாயில்நேர்ந்தவாறு காண்க. ‘பகைவரும் நகூஉ’ மெனவே தான்
புலக்கத்தகுந் தலைவியர் புதல்வனென்றாளாயிற்று.
(மனையோள் ஒத்தலில் தன்னோர் அன்னோர் மிகைபடக் குறித்த
கொள்கைக்கண்ணும்) மனையோள் ஒத்தலில் - தானும் உரிமை
பூண்டமைபற்றி மனையோளொடு தானும் ஒத்தாளாகக் கருதுதலின்:
தன்னோர் அன்னோர் மிகைபடக் குறித்த கொள்கைக்கண்ணும் -
தன்னை ஒக்கும் ஏனை மகளிரின் தன்னை விசேடமுண்டாகக்
`குறித்துக்கொண்ட கோட்பாட்டின் கண்ணும்:
உ-ம்:
“புழற்காற் சேம்பின் கொழுமடல் அகலிலைப்
பாசிப் பரப்பிற் பறழொடும் வதிந்த
உண்ணாப் பிணவின் உயக்கஞ் சொலிய
நாளிரை தரீஇய எழுந்த நீர்நாய்
வாளையோ டுழப்பத் துறைகலுழ்ந் தமையின்
தெண்கள் தேறல் மாந்திய மகளிர்
நுண்செயல் அங்குடம் இரீஇப் பண்பின்
மகிழ்நன் பரத்தைமை பாடி யவிழிணர்க்
காஞ்சி நீழற் குரவை யயருந்
தீம்பெரும் பொய்கைத் துறைகேழ் ஊரன்
தேர்தர வந்த நேரிழை மகளிர்
ஏசுப என்பவென் நலனே அதுவே
பாகன் நெடிதுயிர் வாழ்தல் காய்சினக்
கொல்களிற் றியானை நல்கல் மாறே
தாமும் பிறரும் உளர்போற் சேறல்
முழவிமிழ் துணங்கை தூங்கும் விழவின்
யானவண் வாரா மாறே வரினே
வானிடைச் சுடரொடு திரிதரு நெருஞ்சி போல
என்னொடு திரியேன் ஆயின் வென்வேல்
மாரி யம்பின் மழைத்தோற் சோழர்
வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை
ஆரியர் படையின் உடைகவென
நேரிறை முன்கை வீங்கிய வளையே.” (அகம்.336)
இதனுள் யான் அவண் வாராமறே எனத் தான் மனையோளைப்
போல் இல்லு