Primary tabs


றைதல் கூறி யாண்டுச்செல்லிற் சுடரொடு திரியும் நெருஞ்சி போல
என மகளிரை யான் செல்வுழிச் செல்லுஞ் சேடியர்போலத்
திரியும்படி பண்ணிக்கொள்வலெனக் கூறியவாறு காண்க.
எண்ணிய பண்ணை - தலைவற்குத் தகுமென்று ஆய்ந்த
யாறுங் குளனும் காவும் ஆடிப் பதியிகந்து நுகர்வனபோல்
வனவற்றுக்கண் தாமும் விளையாடுதற்கண்ணும்:
உ-ம்:
“கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சிப்
பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி
யாமஃ தயர்கஞ் சேறுந் தானஃ
தஞ்சுவ துடைய ளாயின் வெம்போர்
நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி
முனைஆன் பெருநிரை போலக்
கிளையொடு காக்கதன் கொழுநன் மார்பே.” (குறுந்.80)
இதனுள் யாமஃதர்கயஞ் சேறும் என விளையாட்டுக் கூறினாள்.
என்ற இவற்றொடு பிறவும் - இக்கூறியவற்றின்கண்ணும்,
புதல்வற்கண்டு நனியுவப்பினுங் கூற்று நிகழுமென்று கூறப்பட்ட
இவ்வெட்டோடே பிற கூற்றுக்களும்; கண்ணிய காமக்கிழத்தியர்
மேன - இக்கருதப்பட்ட காமக்கிழத்தியரிடத்தன எ-று.
கூற்றென்பது அதிகாரத்தான் வருவிக்க; ஒடுவென்றது உருபை;
கண்ணுதல் - ஒரு மனைத் தெருவின்கண் உரிமை பூண்டு இல்லற
நிகழ்த்துவரென்று சிறப்புக்கருதுதல். ‘பிறவு’ மென்றதனான் தலைவனை
என்னலந் தாவெனத் தொடுத்துக் கூறுவனவும், நின்
பரத்தைமையெல்லாம் நின் றலைவிக்கு உரைப்பலெனக் கூறுவனவுஞ்,
சேரிப் பரத்தையரொடு புலந்துரைப்பனவுந், தலைவி கூற்றோடொத்து
வருவனவும் பிறவாறு வருவனவுங் கொள்க.
“தொடுத்தேன் மகிழ்ந செல்லல் கொடித்தேர்ப்
பொலம்பூண் நன்னன் புனனாடு கடிந்தென
யாழிசை மறுகிற் பாழி ஆங்கண்
அஞ்ச லென்ற ஆஅய் எயினன்
இகலடு கற்பின் மிஞிலியொடு தாக்கித்
தன்னுயிர் கொடுத்தனன் சொல்லிய தமையாது
தெறலருங் கடவுள் முன்னர்த் தேற்றி
மெல்லிறை முன்கை பற்றிய சொல்லிறந்
தார்வ நெஞ்சந் தலைத்தலை