Primary tabs


பைந் தொடியன்
விழவயர் துணங்கை தழூஉகஞ் செல்ல
நெடுநிமிர் தெருவிற் கைபுகு கொடுமிடை
நொதும லாளன் கதுமெனத் தாக்கலிற்
கேட்போர் உளர்கொல் இல்லைகொல் போற்றென
யாணது பசலை யென்றனள் அதனெ திர்
நாணிலை எலுவ என்றுவந் திசினே
செறுநரும் விழையுஞ் செம்ம லோனென
நறுநுதல் அரிவை போற்றேன்
சிறுமை பெருமையிற் காணாது துணிந்தே.” (நற்.50)
இதனுள், என்னறியாமையாலே அன்னாய் நின்னையஞ்சியாங்
கள்வன் துணங்கையாடுங் களவைக் கையகப் படுப்பேமாகச் செல்லா
நிற்க, அவன் குழை முதலியவற்றை உடையனாய்த் தெருவுமுடிந்த
இடத்தே எதிர்ப்பட்டானாக, அவ்வருளாமையின் யாணது என்கட்
பசலையென்றானாக, அவனெதிரே எஞ்சிறுமை பெரிதாகலான்
ஆராயாதே துணிந்து நாணிலை எலுவ என்று வந்தேனெனத்
தோழி மெய்யானும் பொய்யானும் புனைந்துரைத்தவாறு காண்க.
ஏனைய வாயில்கள் கூற்று வந்துழிக் காண்க.
இங்ஙனந் தலைவன் சிறைப்புறமாகக் கூறுவன ‘அன்புதலைப்
பிரிந்த கிளவி தோன்றின்’ (தொல்.பொ.179) என்புழிக் கூறும். (25)
வாயில்கட்கு முன்னலைப் புறமொழி
பின்னிலைக்கணுரித்தெனல்
167. முன்னிலைப் புறமொழி எல்லா வாயிற்கும்
பின்னிலைத் தோன்றும் என்மனார் புலவர்.
இது, வாயில்கட்கு உரியதொரு பகுதி கூறுகின்றது.
(இ-ள்.)
முன்னிலைப் புறமொழி - முன்னிலையாய் நிற்கின்ற
தலைவனை நோக்கிப் பிறரைக் கூறுமாறுபோலக் கூறுதல்; எல்லா
வாயிற்கும் - பன்னிரண்டு வாயில்களுக்கும்: பின்னிலைத் தோன்றும்
என்மனார் புலவர் - குறைவேண்டி முயலுங்கால் தோன்றுமென்று
கூறுவர் புலவர் எ-று.
உ-ம்:
“உண்கடன் வழிமொழிந் திரக்குங்கால் முகனுந்தாங்
கொண்டது கொடுக்குங்கால் முகனும்வே றாகுதல்
பண்டுமிவ் வுலகத் தியற்கையஃதின்றும்
புதுவ தன்றே புலனுடை மாந்திர்
தாயுயிர் பெய்த பாவை போல
நலனுடை யார்மொழிக்கண் தா