Primary tabs


வார்தாந் தந்நலந்
தாதுதேர் பறவையி னருந்திறல் கொடுக்குங்கால்
ஏதிலார் கூறுவ தெவனோநின் பொருள்வேட்கை” (கலி.22)
எனத் தலைவனை நோக்கி முன்னிலைப் புறமொழியாகக் கூறிற்று. (26)
கூத்தர்கிளவி இவையெனல்
168. தொல்லவை யுரைத்தலும் நுகர்ச்சி யேற்றலும்
பல்வாற் றானும் ஊடலின் தணித்தலும்
உறுதி காட்டலும் அறிவுமெய் நிறுத்தலும்
ஏதுவின் உணர்த்தலுந் துணிவு காட்டலும்
அணிநிலை யுரைத்தலுங் கூத்தர் மேன.
இது, கூத்தர்குரிய கிளவி கூறுகின்றது.
(இ-ள்.) தொல்லவை உரைத்தலும் - முன்பே மிக்கார் இருவர்
இன்பம் நுகர்ந்தவாறு இதுவெனக் கூறலும்; நுகர்ச்சி ஏற்றலும் -
நுமது நுகர்ச்சி அவரினுஞ் சிறந்ததெனக் கூறலும்; பல் ஆற்றானும்
ஊடலின் தணித்தலும் - இல்லறக் கிழமைக்கு இயல்பன்றென்
றாயினும் இஃது அன்பின்மையா மென்றாயினுங் கூறித் தலைவியை
ஊடலினின்று மீட்டலும்; உறுதிகாட்டலும் - இல்வாழ்க்கை நிகழ்த்தி இன்
பநுகர்தலே நினக்குப் பொருளென்றலும்;
இனிக் கூறுவன தலைவற்குரிய: அறிவு மெய் நிறுத்தலும் -
புறத்தொழுக்கம்மிக்க தலைவற்கு நீ கற்றறிந்த அறிவு இனி
மெய்யாக வேண்டுமென்று அவனை மெய்யறிவின்கண்ணே
நிறுத்தலும்; ஏதுவின் உணர்த்தலும் - இக் கழிகாமத்தான் இழிவு
தலைவருமென்ற தற்குக்காரணங் கூறலும்; துணிவு காட்டலும்;
அதற்கேற்பக் கழிகாமத்தாற் கெட்டாரை எடுத்துக் காட்டலும்;
அணிநிலை உரைத்தலும் - முலையினுந் தோளினும் முகத்தனும்
எழுதுங்காற் புணர்ச்சிதோறும் அழித் தெழுதுமாறு இதுவெனக்
கூறலும்; கூததர் மேன - இவ்வெட்டுங் கூத்தரிடத்தன. எ-று.
கூத்தர், நாடகசாலையர், தொன்றுபட்ட நன்றுந் தீதுங்
கற்றறிந்தவற்றை அவைக்கெல்லாம் அறியக்காட்டுதற்கு உரியராகலிற்
கூத்தர் இவையும் கூறுபவென்றார். இலக்கியம் இக்காலத் திறந்தன.
“பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.” (குறள்.914)
இஃது, அறிவுமெய்