தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5486


 

த்த பெருந்திணையாய் வருவனவுங் காண்க. இஃது அவலம்.

முற்கூறிய நிலைமைகள் கனவின்கண்ணு நிகழுமெனல்

197. கனவும் உரித்தால் அவ்விடத்தான.

இது, மேற்கூறிய நிலைமைகள்  கனவின்கண்ணும்   நிகழு   மெனப்
பகுதிக்கிளவி கூறுகின்றது.

(இ-ள்.)   அவ்விடத்தான - முன்னர்  வழுவமைத்த  நிலைமையின்
கண்ணே வந்தன  ;  கனவும்  உரித்தால் - கனவும்  உரித்தாயிருந்தது
முந்து நூற்கண் எ-று.

எனவே, யானுங் கூறுவலென்றார்.

“அலந்தாங் கமையலேன் என்றானைப் பற்றியென்
நலந்தாரா யோவெனத் தொடுப்பேன் போலவும்
கலந்தாங் கேயென் கவின்பெற முயங்கிப்
புலம்பல் ஓம்பென அளிப்பான் போலவும் ;
முலையிடைத் துயிலும் மறந்தீத் தோயென
நிலையழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும்
வலையுறு மயிலின் வருந்தினை பெரிதெனத்
தலையுற முன்னடிப் பணிவான் போலவும்.”     (அகம்.128)

இவற்றுள்,   தன்னெஞ்சினை உறுப்பும்  உணர்வும் மறுத்துரைத்தலு
முடையதாகக்  கூறியவாறும், ஆங்கு   எதிர்பெய்துகொண்ட  தலைவன்
உருவும்  உறுப்பும் உணர்வும் மறுத்துரைத்தலு  முடையதாகச்  செய்யா
மரபின  செய்ததாகக்    கூறியவாறும்,   அவை     உயர்திணையாகக்
கூறியவாறும், பிறவுமுணர்க.

“இன்னகை யினைய மாகவு மென்வயின்
ஊடல் யாங்குவந் தன்றென யாழநின்
கோடந்து புருவமொடு குவவுநுதல் நீவி
நறுங்கதுப் புளரிய நன்ன ரமையத்து
வறுங்கை காட்டிய வாயல் கனவின்”           (அகம்.39)

என வருவனவுங் கொள்க.                                   (3)

கனவு களவின்கட் செவிலிக்கு முரித்தெனல்

198. தாய்க்கும் உரித்தாற் போக்குடன் கிளப்பின்.

இது, முற்கூறிய கனவு  களவின்கட்    செவிலிக்கு    முரித்தென
வழுவமைக்கின்றது.

(இ-ள்.) உடன்போக்குக் கிளப்பின் -  உடன்போக்கின் கட்கூறின் ;
தாய்க்கும்  உரித்தால்  -  அக்கனவு   செவிலிக்கும் உரித்தாயிருந்தது
முந்து நூற்கண் எ-று.

தோழி  உடன்பட்டுப் போக்குதலானும் நற்றாய் “நற்பாற் பட்டனள்”
என்று  வருதலானுந்   “தாயெனப்படுவோள்  செவிலி  யாகும்”  (124)
என்பதனானுஞ்  செவிலியைத்    தாயென்றார்.   தலைவி   போகாமற்
காத்தற்குரியளாதலானும் அவளை என்றும் பிரியாத பயிற்சியானுஞ் செ
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 09:05:46(இந்திய நேரம்)