தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5501


 

கின்றவிடம் எவ்வாற்றானும் போதற்கரிய நிலமெனக் கூறி  விலக்குதலும்
நீக்குநிலைமையின்று எ-று.

உ-ம்:

“இடுமுள் நெடுவேலி போலக் கொலைவர்
கொடுமரந் தேய்த்தார் பதுக்கை நிரைத்த
கடுநவை ஆராற் றறுசுனை முற்றி
உடங்குநீர் வேட்ட உடம்புயங் கியானை
கடுந்தாம் பதிபாங்குக் கைதெறப் பட்டு
வெறிநிரை வேறாகச் சாரச் சாரலோடி
நெறிமயக் குற்ற நிரம்பாநீ டத்தஞ்
சிறுநனி நீதுஞ்சி யேற்பினும் அஞ்சும்
நறுநுதல் நீத்துப் பொருள்வயிற் செல்வோய்
உரனுடை யுள்ளத்தை”                        (கலி.12)

எனச் சுரமெனக் கூறினாள்.

தலைவியுந் தோழியாற் கூற்றுநிகழ்த்தும்.   சூத்திரம்   பொதுப்படக்
கிடத்தலின் தலைவி உடன்போகக் கருதியவழித்  தலைவனுஞ் சுரமெனக் கூறுதல் கொள்க.

“எல்வளை யெம்மொடு நீவரின் யாழநின்
மெல்லியல் மேவந்த சீறடித் தாமரை
அல்லிசேர் ஆயித ழரக்குத்தோய்ந் தவைபோலக்
கல்லுறின் அவ்வடி கறுக்குந வல்லவோ”          (கலி.13)

என வரும்.                                          (22)

உலகவழக்கு செய்யுட்குமாமெனல்

217. உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தலின்
வழக்குவழிப் படுத்தல் செய்யுட்குக் கடனே

இது, முன்னர்  உலகியல்    வழக்கென்றது     செய்யுட்காமென்று
அமைக்கின்றது.

(இ-ள்.) உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தலின் - உயர்ந்த
மக்கள்      கூறுங்கூற்றும்     வேதநெறியொடு   கூடுதலின்; வழக்கு
வழிப்படுத்தல்  செய்யுட்குக்  கடனே  -  அவ்வழக்கினது   நெறியிலே
நடத்தல் செய்யுட்கு முறைமை எ-று.

‘வழக்கெனப்    படுவது’  (தொல்.பொ.648)   என்னும் மரபியற்
சூத்திரத்தான்     வழக்கு    உயர்ந்தோர்    கண்ணதாயிற்று.  அவர் அகத்தியனார் முதலியோரென்பது  பாயிரத்துட்    கூறினாம்.   அவை
சான்றோர் செய்யுளுட்   காண்க.  இதனை  மேலைச்  சூத்திரத்திற்கும் எய்துவிக்க.                                              (23)

உலகியலல்லாதனவும் பயன்படவரின்

புலனெறிவழக்கிற்கூறல் வழுவன்றெனல்

218. அறக்கழிவு உடையன பொருட்பயம் படவரின்
வழக்கென வழங்கலும் பழித்தன் றென்ப.

இஃது, உலகியல் வழக்கன்றிப் பொருள் கூறினும் அமைகவென்றது.

(இ-ள்.)  அறக்கழிவு உடையன - உலக வழக்கத்திற்குப்  பொருத்த
மில்லாத கூற்றுக்கள்; பொருட்பயம் படவரின் - அகப்பொ
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 09:08:43(இந்திய நேரம்)