தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5502


 

ருட்குப் பயமுடைத்தாக வருமாயின்; வழக்கென வழங்கலும் - அவற்றை
வழக்கென்றே புலனெறி  வழக்கஞ்  செய்தலும்;  பழித்தன்று  என்ப  -
பழியுடைத்தன்றென்று கூறுவாராசிரியர் எ-று.

தலைவன் குறையுற்று  நிற்கின்றவாற்றைத்  தோழி     தலைவிக்குக்
கூறுங்கால்  தன்னை    அவன்    நயந்தான்போலத்    தலைவிக்குக்
கூறுவனவும். “பொய்யாக  வீழ்ந்தே   னவன்மார்பின்”  (கலி.37) எனப்
படைத்து மொழிவனவுந். தலைவி ‘காமக்  கிழவ  னுள்வழிப்  படுதலும்’
‘தாவி னன்மொழி கிழவி கிளத்தலும்’ (தொல்.பொ.115) போல்வன பிறவும்
அறக்கழிவுடையனவாம். தலைவி     தனக்கு   மறை   புலப்படுத்தாது
வருந்துகின்ற    காலத்து    அதனைத்   தனக்குப்   புலப்படுவித்துக்
கொண்டே        அவளை       ஆற்றுவித்தற்         பொருட்டு
அறக்கழிவுடையன கூறலின் அவை பொருட்குப் பயன்றந் தனவாம்.

“நெருந லெல்லை யேனற் றோன்றி”            (அகம்.32)

 என்பதனுட்,

“சிறுபுறங் கவையின னாக வதற்கொண்
டிகுபெயன் மண்ணின் ஞெகிழ்பஞ ருற்றவென்
உள்ளவ னறித லஞ்சி யுள்ளில்
கடிய கூறிக் கைபிணி விடாஅ”

எனத்   தலைவன்  தன்னை  நயந்தானென  இவள்  கொண்டாள்
கொல்லெனத் தலைவி கருதுமாற்றான் தோழி  கூறவே  தலைவி  மறை
புலப்படுத்துவ ளென்பது பயனாயிற்று.

“கயமலருண்கண்ணாய்,,, அங்கணுடையனவன்”       (கலி.37)
என்பதனுள்    “மெய்யறியா    தேன்போற்     கிடந்தேன்”  என்புழி
முன்னர்     மெய்யறி    வழிநிலை   பிழையாமனின்று    பின்னர்ப்  பொய்யாக  வழிநிலை   பிழைத்துக்   கூறியது  வழுவேனும்  இவளுந் தலைவனும்  இவ்வாறே செறிந்தமை யுணர்த்தலின்   மறைபுலப்படுத்துங்
கருத்தினளாந் தலைவி யென்பது பயனாம்.

“மள்ளர்    குழீஇய விழவி னானும்” (குறுந்.31) “அருங்கடியன்னை”
(நற்.365)  “பாம்பு  மதனழியும்  பானாள்   கங்குலும், அரிய வல்லமன்
இகுளை” (அகம்.8)   என்பனவற்றுள்   தலைவி   தேடிச்  சென்றதுஞ் செல்வாமென்றதுஞ்  சிறைப்புறமாக   வரைவுகடாயது.    பொருட்பயன்
றருதலின் அறக்கழிவுடைய வேனும் அமைந்தன.

இது,   ‘பல்வேறு  கவர்பொரு  ணாட்டத்தான்’    (தொல்.பொ.114)
அறக்கழிவுடையனவுங் கூறப்பெறுமென்றமைப்ப
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 09:08:55(இந்திய நேரம்)