தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5503


 

து பெரும்பான்மை.  இஃது  அதிகாரத்தாற்  றோழிக்குந்  தலைவிக்குங்
கொள்க.                                                (24)

மேலதற்கொரு புறனடை

219. மிக்க பொருளினுட் பொருள்வகை புணர்க்க
நாணுத்தலைப் பிரியா நல்வழிப் படுத்தே.

இது,   மேல்   அறக்கழிவுடைத்தாயினுமம்அது   பொருட் பயம்படு
மென்றார், அப்பொருளினை இது வென்றலின் மேலதற்கொரு புறனடை.

(இ-ள்.)  மிக்க பொருளினுள் -  முன்னர்  அகப்பொருட்குப்  பயம்
படவரினென்று   வழுவமைத்த    பொருளின் கண்ணே; நாணுத்தலைப்
பிரியா நல்வழிப் பொருள்வகை படுத்துப் புணர்க்க - தலைவியது  நாண்
அவளிடத்து நின்று நீங்காமைக்குக்   காரணமாகிய     நன்னெறியாகிய
பொருட்கூறுபாடுகளை உள்ளடக்கிப் படுத்துக் கூறுக எ-று.

“நெருந லெல்லை” (அகம்.32) என்பதனுள், நெருநல் யான்காக்கின்ற
புனத்து    வந்து    ஒரு  தலைவன் தன் பெருமைக்கேலாச் சிறுசொற்
சொல்லித்   தன்னை   யான்    வருத்தினேனாகக்   கூறி   என்னை
முயங்கினான்;  யான்  அதற்கு   முன்   ஞெகிழ்ந்தே   மனநெகிழ்ச்சி
அவனறியாமன்  மறைத்து வன்சொற்சொல்லி நீங்கினேன், அவ்வழி என்
வன்கண்மையாற் பிறிதொன்று   கூறவல்லனாயிற்றிலன்,      அவ்வாறு
போனவன்  இன்று  நமக்குத்  தோலாத்  தன்மையின்மை   யினின்றும்
இளிவந்தொழுகுவன்,  தனக்கே  நந்தோள் உரியவாகலும்  அறியானாய் என்னைப்  பிறநிலை முயலுங் கண்ணோட்டமு  முடையவனை    நின்
ஆயமும் யானும் நீயுங் கண்டு நகுவோமாக, நீ அவன்    வருமிடத்தே
செல்வாயாக, எனக் கூறியவழி:  எம்  பெருமானை  இவள் புறத்தாற்றிற்
கொண்டாள்     கொல்லோவெனவும்,    அவன்    தனக்கு   இனிய
செய்தனவெல்லாம் என் பொருட்டென்று கொள்ளாது பிறழக்கொண்டாள்
கொல்லோவெனவுந்   தலைவி   கருதுமாற்றானே   கூறினாளெனினும்
அதனுள்ளே இவளெனக்குச்  சிறந்தாளென்ப துணர்தலின் என் வருத்தந்
தீர்க்கின்றில்லை யென்றான்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 09:09:06(இந்திய நேரம்)