Primary tabs


ம் பொருளும் ஒழிய இன்பமென்று கூறப்படுவதுதான்;எல்லா உயிர்க்கும்
அமர்ந்து வரூஉம்-மக்களுந் தேவரும் நரகரும் மாவும் புள்ளும் முதலிய
எல்லாவுயிர்களுக்கும் மனத்தின்கண்ணே பொருந்தித் தொழிற்பட
வருமாயினும்;
மேவற்றாகும் - ஆணும்பெண்ணுமென
அடுக்கிக்
கூறலுடைத்தாய் நுகர்ச்சி நிகழும் எ-று.
‘மேவற்றாகு’ மென்றார்; என்பது ஆணும்பெண்ணுமாய்ப் போக
நுகர்ந்து வருதலின். ஒருவனும் ஒருத்தியுமே இன்ப நுகர்ந்தா
ரெனப் படாது அவ்வின்பம் எல்லாவுயிர்க்கும் பொதுவென்பதூஉம்
அவை இருபாலாய்ப் புணர்ச்சி நிகழ்த்துமென்பதூஉங் கூறியதாயிற்று.
அறனும் பொருளும் எல்லா உயிர்க்கும் நிகழா, மக்கட்கே சிறந்து
வருமென்றா ராயிற்று. (29)
ஊடல் தீர்க்கும் வாயில் நால்வர்க்குமுரித்தெனலும்
பரத்தையிற்பிரிவு ஒரே நிலத்தின்கண்ணதெனலும்
224. பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே
நிலத்திரி பின்றஃ தென்மனார் புலவர்
இது தலைவர்க்குரிய தலைவியர் பலருந் தலைவன் பரத்தைமை
காரணமாக ஊடற்குரியரென்பதூஉம் அவரிடத்து வாயில் சேறற்குரியர்
என்பதூஉங் கூறி வழுவமைக்கின்றது.
(இ-ள்.) பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்து - தலைவன்
பரத்தைமையால் தலைவிக்குத்
தோன்றிய ஊடல் தீர்த்தற்குரிய வாயிலை
அவன் பாற்செலுத்தல் நான்கு வருணத்தார்க்கும் உரித்து; அஃது நிலத்
திரிபு இன்று என்மனார் புலவர் - அவ்வொழுக்கம் பெரும்பான்மை
மருதநிலத்தினின்றுந் திரிந்துவருதல் இன்றென்று கூறுவர் புலவர் எ-று.
‘பரத்தைவாயி’லென்றது குதிரைத்தேர்போல நின்றது, இதனாற் பயன்
அந்தணர்க்கு நால்வரும் அரசர்க்கு
மூவரும் வணிகர்க்கு இருவருமாகிய
தலைவியர் ஊடற்குரிய ரென்பதூஉம் அவர்பால் தத்தந்
தலைவர்
ஊடறீர்த்தற்குரிய வாயில் விடுவ ரென்பதூஉம், அவர் வாயின்
மறுத்தலும் நேர்தலும் உடைய ரென்பதூஉம், ஏனைப் பரத்தையர்க்கு வாயில் விடுதல் இன்றென் பதூங் கூறியவாறாயிற்று. ‘ஒருபாற்
கிளவி’ (தொல்.பொ.222) என்பதனான் ஒரோவோர்குலத்துத் தலைவருந்