தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5508


 

தலைவியரும் அடங்குமாறுணர்க. உதாரணம் முற்காட்டியவற்றுட் காண்க.
ஒருவனும் ஒருத்தியுமாகி   இன்பநுகர்ந்து    இல்லற    நிகழ்த்துதலே
சிறந்ததென்றற்கு  இங்ஙனம்  பலராதல்  வழுவென்று அதனை
அமைத்தார்.                                             (30)

களவின்கண் தலைவிகண் நிகழும் வழு அமைதி இவை எனல

225. ஒருதலை உரிமை வேண்டியும் மகடூஉப்
பிரித லச்சம் உண்மை யானும்
அம்பலும் அலருங் களவுவெளிப் படுக்குமென்று
அஞ்ச வந்த ஆங்கிரு வகையினும்
நோக்கொடு வந்த இடையூறு பொருளினும்
போக்கும் வரைவும் மனைவின்கண் தோன்றும்.

இது, களவின்கட் டலைவியின்கண் நிகழ்வதொரு வழுவமைக்கின்றது.

(இ-ள்.)  உரிமை ஒருதலை  வேண்டியும்  -  இடைவிடாது  இன்ப
நுகர்தலோடு இல்லறநிகழ்த்தும் உரிமையை   உறுதியாகப்   பெறுதலை
விரும்புதலானும்;  பிரிதல்  அச்சம்  மகடூஉ  உண்மை யானும் - ஆள்வினைக்

குறிப்புடைமையின்     ஆண்மக்கள் பிரிவரென்று அஞ்சும் அச்சம்
மகளிர்க்    குண்டாகையினாலும்;  ஆங்கு  அம்பலும்  அலரும் களவு
வெளிப்படுக்கும் என்று  அஞ்சவந்த இருவகையினும் - அக்களவொழுக்
கத்திடத்தே அம்பலும்  அலரும்    இக்களவைப்   புலப்படுக்குமென்று அஞ்சும்படி   தோன்றிய  இருவகைக்  குறிப்பானும்; நோக்கொடு வந்த இடையூறு பொருளினும் - பிறர்  தன்னை அயிர்த்துநோக்கும் நோக்கங்
காரணமாக வந்த கூட்டம் இடையூறுற்ற  காரியத்தினாலும்; மனைவிகண்
போக்கும்   வரைவும்   தோன்றும் - தலைவியிடத்தே உடன்போக்கும்
வரையக் கருதுதலுந் தோன்றும் எ-று.

“வழையம     லடுக்கத்து”   (அகம்.328)   என்பதனுண்  “முகந்து
கொண்டடக்குவம்”  என இடைவிடாது இன்பநுகர    விரும்பியவாறும்
உள்ளுறையான் இல்லற நிகழ்ந்த விரும்பியவாறு காண்க.

“உன்னங் கொள்கையொடு”                   (அகம்.65)

என்பது அம்பலும் அலரும் அஞ்சிப் போக்குடன்பட்டது.

“ஆனா தலைக்கு மறனில் அன்னை
தானே யிருக்க தன்மனை.”                  (குறுந்.262)

இஃது, இடையூறு பொருளின்கட் போக்குடன்பட்டது.

ஏனைய   முன்னர்க்   காட்டியவற்றுட் காண்க. ‘ஒன்றித் தோன்றுந்
தோழி  மேன’ (தொல்.பொ.39) என்பதனான் தோழிக்கும் இவையுரிய
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 09:10:05(இந்திய நேரம்)