Primary tabs


குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை” (குறள்.1151)
எனவும்,
“அன்பற மாறியா முள்ளத் துறந்தவள்
பண்பு மறிதிரோ வென்று வருவாரை
என்றிறம் யாதும் வினவல் வினவிற்
பகலின் விளங்குநின் செம்மல் சிதையத்
தவலருஞ் செய்வினை முற்றாம லாண்டோர்
அவலம் படுதலும் உண்டு” (கலி.19)
எனவும் வருவன பிறவுங் கொள்க. (32)
புலவியுள் தலைவற்குந் தலைவிக்குமுரிய நிலைமைகூறல்
227. மனைவி உயர்வுங் கிழவோன் பணிவும்
நினையுங் காலைப் புலவியு ளுரிய.
இது. கற்பினுள் தலைவற்குந் தலைவிக்கும் எய்தியதொரு
வழுவமைக்கின்றது.
(இ-ள்.)
புலவியுள் மனைவி உயர்வும் - புலவிக் காலத்துத் தலைவன்
பணிந்துழி உட்கும் நாணுமின்றித் தலைவி அதனை ஏற்றுக் கோடலும்: கிழவோன் பணிவும் - தலைவன் தலைமைக்கு
மாறாகத் தலைவியைப் பணிதலும்; நினையுங்காலை உரிய - ஆராயுங்
காலை இருவர்க்குமுரிய எ-று.
உ-ம்:
“வலையுறு மயிலின் வருந்தினை பெரிதெனத்
தலையுற முன்னடிப் பணிவான் போலவும்
கோதை கோலா விறைஞ்சி நின்ற
ஊதையஞ் சேர்ப்பனை அலைப்பேன் போலவும்.” (கலி.128)
இது, முன்னே தலைவி மனத்து நிகழ்தலுண்மையிற் கனவிலுங்
கண்டாளென்றுணர்க.
“தப்பினேன் என்றடி சேர்தலும் உண்டு.”
(கலி.89)
என்பதும் அது.
‘நினையுங்காலை’ யென்றதனான் தோழியுயர்வுங் கிழவோன்பணிமொழி பயிற்றலுங் கொள்க.
“ஒன்று, இரப்பான்போல் எளிவந்துஞ் சொல்லும் உலகம்
புரப்பான் போல்வதோர் மதுகையும் உடையன்
வல்லாரை வழிபட் டொன்றறிந்த தான்போல்
நல்லார்கண் தோன்றும் அடக்கமும் உடையன்
இல்லோர் புன்கண் ஈகையில் தணிக்க
வல்லான் போல்வதோர் வண்மையு முடையன்
அன்னான் ஒருவன் தன் ஆண்டகை விட்டென்னைச்
சொல்லுஞ்சொல் கேட்டீ சுடரிழாய் பன்மாணும்.” (கலி.47)
இதனுள் தலைவன் இரந்துரைத்தவாறுந் தான் அதனை ஏற்றுக்
கொண்டவாறுங் காண்க. இச்சூத்திரம் புலவிக்கே கூறினார்.
ஊடற்குந்
துனிக்குங் ‘காமக்கடப்பின்’ (தொல்.பொ.160) என்பதனுட்கூறினாரென
வுணர்க.
(33)
கற்புக்காலத்து வேட்கைமிகுதியான் தலைவனுந் தலைவியும்
ஒருவரை ஒருவர் புகழ்வர் எனல்
228. நிகழ்தகை மருங்கின் வேட்கை மிகுதியிற்
புகழ்தகை வரையார் கற்பி னுள்ளே.
இது, கற்புக்காலத்துத் தலைவற்குந் தலைவிக்கும் உரியதொரு
வழுவமைக்கின்றது:
(இ-ள்.)
கற்பினுள் - கற்புக்காலத்து; தகைநிகழ் மருங்கின் -
ஒருவர்க்கொருவர் காதல் மனத்து நிகழுமிடத்து; வேட்கை மிகுதியிற்
புகழ் தகை வரையார் - வேட்கைமிகுதியானே அதனைப்
புகழ்ந்துரைக்குத் தகைமையினை ஆசிரியர் இருவருக்கும் நீக்கார்
கொள்வர் எ-று.
“ஆக வனமுலை